1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

விலங்குகள் (animals) குரலொலி (vocalization) எழுப்புவதேன்

🔥அறிவியல்-விளக்கம்🔥
💐விலங்குகள் (animals) குரலொலி (vocalization) எழுப்புவதேன்💐
🏵பதில்🏵
👉நிலவாழ் மற்றும் நீர்வாழ் பாலூட்டிகளானது தொடர்புகொள்ளுதல், உணவு உட்கொள்ளுதல் (feeding)  வழிசெலுத்துதல் (navigation),எச்சரிக்கை  செய்தல்(warning),சண்டையிடுவதற்கான அறிவிக்கை செய்தல் ,பசியுணர்வு  தெரிவித்தல் (Hunger),இருப்பிடத்தை தெரிவித்தல் மற்றும் இனச்சேர்க்கைக்கான அழைப்பு (mating calls)  போன்றவற்றை குறிக்க குரலொலி பயன்படுத்துகின்றன.
இந்த தகவல்தொடர்பு ஒரு இனத்திற்குள் (single species) மட்டுமே நிகழ்கிறது.
🏵விளக்கம்🏵
👉பாலூட்டிகளில் (mammalian) குரலொலியானது (vocalization) குரல்வளையின் (larynx) செயல்பாட்டால் உருவாக்கப்படுகிறது.
👉நுரையீரலிலிருந்து (lung) வாய்வழி குழிக்குள் (oral cavity) காற்று செல்லும் போது குரல்நாண்கள் (vocal cords) அதிர்வுறுகிறது.இந்த அதிர்வே குரலொலியை பாலூட்டிகளில் ஏற்படுத்துகிறது.
👉கடல் வாழ் பாலூட்டிகளும் நிலவாழ் பாலூட்டிகளைப் போலவே குரலொலியை எழுப்புகின்றன.
👉கடல்நாய் (seals), கடற்சிங்கம் போன்றவை மனிதனை ஒத்த குரல்வளையை கொண்டிருக்கின்றன.
👉Baleen திமிங்கலம் (whale)குரலொலியை உருவாக்க குரல்வளையைப் பயன்படுத்துகிறது.
👉கூரிய பல் திமிங்கலம் (toothed whale)குரல்வளையும், சிறப்பு காற்றுப்பையும் (specialized air sacs) கொண்டுள்ளன. குரல்வளை "விசில்"(whistle) குரலொலியை ஏற்படுத்துகிறது.காற்றுப்பையானது உயர் அதிர்வெண் எதிரொலியை (echolocation) ஏற்படுத்தி இரையை தேடுகிறது.
🔥மேலும் அறிக🔥
👉நிலப்பரப்பு பாலூட்டிகள் ஏற்படுத்தும் குரலொலிகள் :
நாய்-குரைத்தல்,பூனை-மியாவ்,மாடு-கத்துதல்,குதிரை-கணைத்தல்,பன்றி-உறுமுதல்,சிங்கம்-கர்ஜித்தல்,பாம்பு-சீறுதல் போன்ற குரலொலிகளை ஏற்படுத்துகின்றன.
👉நீருக்கடியில் ஏற்படுத்தப்படும் குரலொலிகள் (underwater vocalization)
Bell,trills,warbles,clicks, whistle போன்றவையாகும்.
👉Humpback திமிங்கலம் தன் வாலை (tail) நீரின் மேற்பரப்பில் அறைவதால் (slapping) 30-12000Hz வரையிலான அகலக்கற்றை (broadband) சத்தத்தை (sound) உருவாக்குகிறது.
🙏நன்றி
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags