1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

பெரும்பாலான விலங்குகள் (most animals) இயற்கையிலேயே நீந்தும் திறனைப் (natural swimmer) பெற்றிருப்பதேன்-அறிவியல்-விளக்கம்

🔥அறிவியல்-விளக்கம்🔥
💐பெரும்பாலான விலங்குகள் (most animals) இயற்கையிலேயே நீந்தும் திறனைப் (natural swimmer) பெற்றிருப்பதேன்💐
🏵பதில்🏵
👉பெரும்பாலான நான்குகால் பிராணியின் (quadrupeds) சாதாரண உடல் தோரணையானது (normal posture in land) நீச்சல் தோரணைக்கு (swimming posture) ஒத்துள்ளதால் இயற்கையாகவே நீந்தும் திறனைப் பெற்றுள்ளன.
🏵விளக்கம்🏵
👉பெரும்பாலான பாலூட்டிகள் நான்குகால் பிராணியாகும் (quadrupeds).இவை இடம்பெயர்வதற்கு (locomotion)அதன் நான்கு கால்களையும் பயன்படுத்துகின்றன.
👉நான்கு கால் கொண்ட பாலூட்டிகள் நிலப்பரப்பில் நடக்கும் போது அதன் உடல் நிலப்பரப்பிற்கு கிடைமட்டமாக(Horizontal) உள்ளது.
👉நீரில் நீந்தும் (swim) போதும் அதன் உடற்தோரணை (body posture) நீருக்கு கிடைமட்டமாகவே உள்ளது.
👉நிலப்பரப்பில் உள்ள விலங்குகளின் சாதாரண உடற்தோரணையானது நீச்சல் உடற்தோரணைக்கு ஒத்துள்ளது.
👉இதனால் நீரில் நீந்தும் போது விலங்குகளின் உடல் தோரணையில் மாற்றம்  தேவையில்லாததால் புதிதாக எதையும் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை. இதனால் இயற்கையாகவே நீந்தும் திறனைப் (natural swimmer) பெற்றுள்ளன.
👉ஒட்டகம், கங்காரு, பன்றி,சிம்பன்சி,யானை,காண்டாமிருகம் (rhino),மாடு,பாம்பு, தீக்கோழி(porcupine), பூனை,நாய் போன்றவை இயற்கையாக நீந்தும் திறனைப் பெற்றுள்ளன.
👉இருப்பினும் கொரில்லா,ஒராங்குட்டான்,வெளவால்,மனிதர்கள்,ஒட்டகச்சிவிங்கி போன்றவை இயற்கையாக நீந்தும் திறனைப் பெற்றிருக்கவில்லை.
👉மனிதர்கள் நடக்கும் போது உடலானது நிலப்பரப்பிற்கு செங்குத்தாக அமைகிறது.நீரில் நடுநிலை மிதவைவிசையை (neutral buoyancy) ஏற்படுத்தி நீந்துவதற்கு உடற்தோரணையை கிடைத்தளமாக அமைக்க பயிற்சி மேற்கொள்வதன் மூலம் நீந்தலாம்.
🔥மேலும் அறிக🔥
👉விலங்கு உலகத்தில் சிறந்தமுறையில் நீந்தும் விலங்கு "டால்பின்" (dolphin)ஆகும்.ஏனெனில் இயற்கையாகவே நீரியக்க விசைக்கேற்ற உடலமைப்பை (Hydrodynamic body)பெற்றுள்ளது.
👉நீரில் யானை தொடர்ச்சியாக 40 கிமீ தூரம் வரை நீந்தும் ஆற்றலைப் பெற்றுள்ளது.நீந்தும் போது சுவாசிக்க தும்பிக்கையை பயன்படுத்துகிறது.
🙏நன்றி
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags