கூந்தல் வளர்ச்சியை விரும்பாதவர்கள் இல்லை.
மென்மையான முடி, வறண்ட முடி, கோரை முடி, பட்டு போன்ற முடி, நீளமான முடி என்று ஒவ்வொரு முடி இருந்தாலும் பராமரிப்பு ஒன்று தான்.
கீரைகள் உடலுக்கு அதிகமான சத்துகள் தருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதே போன்று சில குறிப்பிட்ட கீரைகள் முடி வளர்ச்சிக்கும் உதவும் என்பதும் தெரியுமா?
கீரைகளில் கரிசலாங்கண்ணி கீரை குறித்து அனைவருக்கும் தெரியும். இவை மஞ்சள் காமாலை. ரத்த சோகை போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன் படுத்தப்படுகிறது. அழகு சார்ந்த விஷயங்களில் இவை கூடுதலாக பயன் படுத்தப்படுகிறது. இயற்கைப் பொருளைக் கொண்டு அழகு படுத்திக் கொள்ளும் அனைவரும் கரிசலாங்கண்ணி பயன் படுத்தாமல் இருக்க மாட்டார்கள்.
கரிசலாங்கண்ணி தங்கச்சத்து, இரும்புச்சத்து உள்ள கீரை என்பதை நம் முன்னோர்கள் முன்பே உணர்ந்திருந்தார்கள். அதனால் அவ்வபோது சமையலில் பயன்படுத்தி வந்தார்கள். இளநரை எட்டிபார்த்தால் அவர்கள் செய்யும் கூந்தல் தைலம் கரிசலாங்கண்ணி தைலமாகத் தான் இருக்கும்.
தற்போது முடி வளர்ச்சிக்கு பலவிதமான எண்ணெயோடு கூந்தல் ஃபேக் போடுவதுமுண்டு. அதே போன்று கரிசலாங்கண்ணி இலையை மைய அரைத்து பாதி அளவு நீர் கலந்து கொதிக்க வைத்து தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும். இதனோடு மிளகு சேர்க்கலாம். அப்படி செய்தால் கண் ஆரோக்கியமும் மேம்படும்.
கரிசலாங்கண்ணி கீரையை அரைத்து சிறு சிறு வடைகளாக தட்டி காயவைத்துகொள்ள வேண்டும். வெயிலில் காய வைக்காமல் நிழலில் உலர்த்த வேண்டும். சற்று ஈரப்பதம் இருக்கும் போது சுத்தமான தேங்காயெண்ணெயை வாணலியில் காய்ச்சி அதில் இந்த வடைகளை போட்டு வெடிப்பு அடங்கியதும் இறக்கி இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தேய்த்து குளித்துவர வேண்டும். அப்படி செய்துவந்தால் இளநரை பிரச்சனை வராமல் தடுக்கலாம்.
எண்ணெய் காய்ச்சிய பிறகு பயன்படுத்தினால் கூந்தல் பலனளிக்காது என்று நினைப்பவர்கள் கரிசலாங்கண்ணி இலையை நிழலில் உலர்த்தி பொடித்து, மெல்லிய வெள்ளை துணியில் சிறிதளவு கட்டி விடுங்கள். பிறகு இரும்பு வாணலியில் அந்த துணியை போட்டு, சுத்தமான தேங்காயெண்ணெய் மூழ்கும் அளவு விட்டு ஒரு நாள் முழுக்க ஊறவிடுங்கள். மறுநாள் பார்த்தால் அந்த எண்ணெய் கருப்பு நிறமாக மாறி இருக்கும். அதிக கசடு இருந்தால் வடிகட்டி பயன்படுத்தலாம். அல்லது அப்படியே தலைக்கு பயன்படுத்தி வரலாம். இதனால் இலேசான இளநரை கூட மறைந்துவிடும்.
கரிசலாங்கண்ணி பொடி வீட்டிலேயே தயாரிக்க முடியும் என்றாலும் இது தற்போது நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கிறது. அதை வாங்கி பயன்படுத்துங்கள்.
அதே போன்று கரிசலாங்கண்னி எண்ணெயும் கடைகளில் கிடைக்கிறது. இதை தலைக்கு தடவி ஊறவைத்து குளிக்கலாம். தொடர்ந்து இதை தேய்த்து வந்தால் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
கரிசலாங்கண்ணி வெள்ளை கரிசலாங்கண்ணி மற்றும் மஞ்சள் கரிசலாங்கண்ணி என்று இரண்டு வகைகள் உண்டு என்றாலும் கூட மழைக் காலங்களில் கிடைக்கும் மஞ்சள் கரிசலாங்கண்ணி முடி வளர்ச்சிக்கு ஏற்றது. இவை அதிகமாக கிடைக்கும் போது இந்த கீரையை வாங்கி காம்புகளை நீக்கி மண் போக அலசி கொள்ள வேண்டும். பிறகு நீர் விடாமல் மிக்ஸியில் அரைத்தால் சாறு கிடைக்கும்.
கிடைக்கும் சாறுக்கு சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து இரும்பு வாணலியில் காய்ச்சி வெடிப்பு அடங்கியதும் தலையில் தடவி வரவேண்டும். இந்த எண்ணெய் தடவும் போது வேறு எந்தவிதமான எண்ணெயும் பயன்படுத்த வேண்டாம். இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இளநரை பாதிப்பு இருக்காது. முடியின் கருமை அதிகரிக்கும். வளர்ச்சியும் வேகமாகும்.
கரிசலாங்கண்ணி இலையை மைய அரைத்து வடைகளாக தட்டி காயவைத்துவிடுங்கள். பிறகு அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்கு தேய்க்கலாம். எளிமையான வழியும் கூட.
தலைக்கு குளிக்கும் போது கரிசலாங்கண்ணி இலையை மைய அரைத்து முடியின் வேர்க்கால்களில் மட்டும் தடவி ஊறவைத்து குளித்து வந்தால் தலைமுடியின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வேகமாக வளரும்.
கரிசலாங்கண்ணியை முடிக்கு காய்ச்சும் அனைத்து கூந்தல் தைலத்திலும் பயன்படுத்தலாம். பொடியாகவோ சாறாகவோ கலக்கலாம். இதை உள்ளுக்குள் எடுத்து கொள்ளலாம் என்பதால் சருமத்துக்கும் கூந்தலுக்கும் எந்தவிதமான ஊறு விளைவிக்காது. கெமிக்கல் கலக்காமல் நரைத்த முடியை கருமையாக்கும் சிறந்த இயற்கை பொருள் இருக்கும் போது செயற்கையை எதற்கு நாட வேண்டும்.
குறிப்பு:
அதிக குளிர்ச்சி நிறைந்த மூலிகை இந்த கரிசலாங்கண்ணி என்பதால் அதிக குளுமை உள்ளவர்கள், சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் பயன் படுத்தவேண்டாம். அப்படி பயன் படுத்துவதாக இருந்தால் எண்ணெயாக காய்ச்சி பயன் படுத்தலாம். அப்படியே பச்சையாக காய்ச்சி பயன் படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.