🔥அறிவியல் விளக்கம்🔥
💐மனிதர்களுக்கு நிலைத்த பற்கள் (permanent teeth) விழுந்தால் முளைக்காமலிருப்பதேன்💐
👉நம் டி.என்.ஏவில் (DNA) உள்ள மரபணுவானது (genes) பிறப்பதற்கு முன்பே இரண்டு தொகுப்பு பற்கள் (two set of teeth) மட்டும் வளர தேவையான கட்டளையை மட்டும் பெற்றுள்ளது.அதனால் நிலைத்த பற்கள் ஒருமுறை விழுந்தால் மீண்டும் முளைப்பதில்லை.
🏵பற்கள் (teeth)🏵
👉மனிதர்கள் பிறப்பிலேயே "diphyodont" என்ற வகையில் இரண்டு தொகுப்பு பற்களை மட்டும் கொண்டுள்ளனர்.
அவை பால் பற்கள் (milk teeth) மற்றும் நிலைத்த பற்கள் (permanent teeth)ஆகும்.
👉பால் பற்களின் எண்ணிக்கை 20 ஆகும்.குழந்தையின் 7 அல்லது 8 வயது வரை மட்டும் இருக்கும்.
👉பால் பற்கள் விழுந்தவுடன் நிலைத்த பற்கள் முளைக்கின்றன.இவற்றின் எண்ணிக்கை 32 ஆகும்.
👉நிலைத்த பற்களானது வெட்டுப் பற்கள்,கோரைப்பற்கள்,முன்கடவாய் மற்றும் பின்கடவாய் பற்களை மேற்புற ,கீழ்ப்புற தாடையில் கொண்டுள்ளது.
👉பிறந்தவுடன் குழந்தை பெரியவர்களைவிட சிறிய முகத்தையும் தாடையையும் கொண்டுள்ளது. அப்போது நிலைத்த பெரிய பற்கள் (permanent teeth) ஒரு குழந்தையின் வாயில் பொருந்தாது.ஆனால் 8 to 10 வயது குழந்தையின் முகத்தின் அளவு வயது வந்தோரின் முகத்தின் அளவிற்கு நெருக்கமாக பொருந்துவதால் நிலையான பற்கள் சரியாக பொருந்துகின்றன.
👉இதற்கேற்றாற்போல் டி.என்.ஏவானது இரண்டு தொகுப்பு பற்களுக்கான வழிமுறையை மட்டுமே மரபணுவில் கொண்டுள்ளது.
🔥மேலும் அறிக🔥
👉நமது உடலில் உள்ள பொருள்களிலேயே மிகவும் கடினமானது (Hardest substance) பல்லின் "எனாமல்" (enamel) ஆகும்.
👉ஒட்டகச்சிவிங்கி (giraffe) கீழ்த்தாடை பற்களை (bottom teeth) மட்டுமே கொண்டுள்ளது.
👉முதலை (crocodile) அதனுடைய 80 பற்களை 35 முதல் 75 ஆண்டுகால வாழ்நாளில் சுமார் 50 முறை திரும்பவும் முளைக்கப் பெறுகின்றது.
🙏நன்றி
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.