🔥அறிவியல்-விளக்கம்🔥
💐விலங்குகள் (animals) வால்களை (tail's) கொண்டிருப்பதேன்💐
👉விலங்குகளுக்கு அதன் வாலின் (tail) பயன்பாடு இன்னும் தேவையுள்ளதால் அவற்றை பரிணாம வளர்ச்சியில் பாதுகாத்துள்ளன.
👉இருப்பினும் அனைத்து விலங்குகளும் ஒரே மாதிரியான பயன்பாட்டிற்காக வாலை பயன்படுத்துவதில்லை.
👉விலங்குகள் பெரும்பாலும் அதன் சமநிலைத்தன்மை (balancing), தற்பாதுகாப்பு (defense),மற்றும் வழிசெலுத்துதல் (navigation) ஆகியவற்றிற்காக வாலைப் பயன்படுத்துகின்றன.
🏵வால்(tail)🏵
👉விலங்குகளின் உடல்களின் பின்புற முடிவில் உள்ள பகுதியாகும்.
👉வால்கள் சில முதுகெலும்புள்ளவைகளின் (vertebrates) முதன்மை அம்சமாக உள்ளது.
👉முதுகெலும்பு அற்றவைகளான (invertebrates) தேள் (scorpion),நத்தை (snails) மற்றும் அட்டை (slugs) போன்றவை வால்களை இணையுறுப்புகளாக (Appendage) கொண்டுள்ளன.
🏵வாலின் வகைகள்🏵
👉குரங்குகள் மற்றும் சில விலங்குகள் இரண்டு வகையான வால்களை பயன்படுத்துகின்றன.
அவை non-prehensile tail மற்றும் prehensile tail
1.non-prehensile வால் :இந்த வகையான வாலானது விலங்குகளை சமநிலைப்படுத்த உதவுகிறது.எ.கா பூனை தாவும்போது குதிக்கும்போது உடலை சமநிலைசெய்தல்
2.prehensile வால்:இந்த வகை வால் பொருளைப் பிடிக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் இது கூடுதலாக கையாகவும் (arm) உதவுகிறது.எ.கா:பல்லி,குரங்கு இவ்வகை வாலைக் கொண்டுள்ளது.
🏵விலங்குகளின் வாலின் பயன்பாடு🏵
👉மீன்களுக்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் வால்கள் இடம்பெயர்வதற்கான (locomotion)ஆதாரமாக உள்ளது.
👉யானை,குதிரை போன்ற விலங்குகள் வாலை ஈக்கள் மற்றும் பூச்சி கடியிலிருந்து தப்பிக்க தூரிகையாக பயன்படுத்துகின்றன.
👉குரங்குகள் வாலை மரக்கிளையில் பற்றி ஏறுவதற்கு ஏதுவாக பயன்படுத்துகின்றன.
👉நீர்நாய்கள் அதன் வாலை நீரில் அடித்து பிற நாய்களுக்கு ஆபத்தை உணர்த்துகின்றன.
👉வீட்டு நாய்கள் தனது உணர்ச்சியை வாலை ஆட்டி காட்டுகின்றன.
👉தேள் போன்ற உயிரினங்கள் வாலை கவசமாக (armored)கொண்டுள்ளன.ஏனெனில் விஷம் (venon) கொண்டுள்ளது.
👉பல்லிகள் வேட்டையாடுபவர்களிடமிருந்து தப்பிக்க தங்கள் வாலை எளிதாக பிரிக்கின்றன (detach).
🔥மேலும் அறிக🔥
👉பறவைகளின் நீண்ட இறகு வால் அதன் திசையை மாற்றவும் ,உட்காரும் போது உடலை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது.
👉மயிலின் (peafowl)மாற்றியமைக்கப்பட்ட இறகு வாலானது பெண் மயிலை கவர(courtship) பயன்படுத்துகிறது.
🙏நன்றி
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.