RTE 25% - மாணவர்கள் சேர்க்கை - Completion certificate சார்ந்து மெட்ரிக் பள்ளி இயக்குநரின் செயல்முறைகள்
2020-2021 ஆம் கல்வியாண்டிற்கு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 , பிரிவு 12 ( 1 ) ( சி ) யின்படி 25 % ஒதுக்கீட்டில் சேர்க்கைக்கான வழிமுறைகள் விரிவாக வழங்கப்பட்டு , முதற்கட்டமாக இணையதளத்தில் 27.08.2020 முதல் 25.09.2020 வரை விண்ணப்பித்து குலுக்கல் மற்றும் குலுக்கலின்றி தகுதியுள்ள குழந்தைகளை தெரிவு செய்து பெற்றோரின் முழு சம்மதத்துடன் பள்ளியில் அக்குழந்தை சேர்க்கை செய்ததை உறுதி செய்த பின்னர் EMIS இணையதளத்தில் பள்ளியின் வாயிலாக பதிவேற்றம் செய்யத் தெரிவிக்கப்பட்டது . அப்பணி முடிவுற்றதா என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்து ( Completion certificate ) முதற்கட்ட பணி முடிவுற்றதற்கான சான்றிதழ் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . இப்பணி முழுமையாக முடிவடைந்த பின்னரே இரண்டாம் கட்டத்திற்கான காலி இடங்கள் EMIS தளத்தில் அளிக்க இயலும்.
முதன்மைக் கல்வி அலுவலர்கள் இப்பொருளின் மீது தனிக்கவனம் செலுத்தி பணியை முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். EMIS இணையதளத்தில் முதற்கட்ட சேர்க்கை 24.10.2020 - க்குள் ( சனிக்கிழமை ) பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.