தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை: 86,326 மாணவர்கள் விண்ணப்பம்
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25% இடங்களில் இலவசமாக ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவர். இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
அதன்படி 10 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் 1 லட்சத்து 15,763 இடங்கள் உள்ளன. இதற்கு 86,326 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதையடுத்து விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் பணிகள் இன்று (செப்.30) முடிக்கப்பட்டு, தேர்வான மாணவர்கள் பட்டியல் பள்ளிகளில் ஒட்டப்படவுள்ளன. ஒரு பள்ளியில் அதிக அளவிலான விண்ணப்பங்கள் வந்திருந்தால் அக்.1-ம் தேதி வருவாய்த் துறைஅதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் முன்பு குலுக்கல் மூலம்மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த குலுக்கலில் பெற்றோரும் பங்கேற்கலாம். அதன்பின் தேர்வான குழந்தைகளுக்கான மாணவர் சேர்க்கை அக்.3 முதல் 7-ம் தேதி வரை நடைபெறும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.