1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை 2020 - காரணம், பூஜைக்கான நேரம், வழிபாடு முறைகள்

 




நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமான மகிசாசூரணை வதம் செய்ய ஆயுதங்களுக்கு பூஜை செய்ததை ஆயுத பூஜையாகவும், அதன் வெற்றியை கொண்டாட விஜய தசமி கொண்டாடப்படுகின்றது. 2019 சரஸ்வதி பூஜை எப்போது கொண்டாடப்படுகிறது என்பதை பார்ப்போம்.

முப்பெரும் தேவியர் ஒன்றாக சேர்ந்து அம்பிகையாகி ஒன்பது நாள் விரதம் இருந்து மகிசாசூரணை வதம் செய்ததை கொண்டாடும் நாள் தான் விஜய தசமி. அப்படி மகிசாசூரணை வதம் செய்வதற்கு முன்னர் அம்பிகை ஏந்தியுள்ள ஆயுதங்களுக்குச் சிறப்பு பூஜை செய்ததை கொண்டாடும் விதமாக நாம், ஆயுத பூஜை கொண்டாடி வருகின்றோம்.
அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு அணுவிலும் இறைவன் இருக்கின்றான் என்பார்கள். அந்த வகையில் நம் வாழ்க்கைக்கு மூலதனமாக இருக்கும் நம் தொழிலுக்குத் தேவையான பொருட்களை வைத்து அதை தெய்வமாக எண்ணி பூஜை செய்யும் நாள் தான் ஆயுத பூஜை தினம்.

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாட, சுவாமி வழிபாடு செய்ய நல்ல நேரம்

25 அக்டோபர் 2020 (ஐப்பசி 9) ஞாயிற்றுக் கிழமை

அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை (குரு ஹோரை) - சரஸ்வதி பூஜை மட்டும்

காலை 7 மணி முதல் 10 மணி வரை (சுக்ர ஹோரை, புதன் ஹோரை, சந்திர ஹோரை) - ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை

காலை 11 மணி முதல் 12 மணி வரை (குரு ஹோரை) - சரஸ்வதி பூஜை

பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை (சுக்ர ஹோரை, புதன் ஹோரை) - ஆயுத பூஜை மட்டும்


இரவு 9 மணி முதல் 11 மணி வரை (சுக்ர ஹோரை, புதன் ஹோரை) - ஆயுத பூஜை மட்டும்


குறிப்பு:
ஆயுத பூஜை தினங்களில் வீடு, கடை, அலுவலகங்களில் பூஜை செய்து பின்னர் திருஷ்டி சுற்றி பூசணி காயை சாலையில் உடைக்காமல், ஓரமாக உடைத்து போட வேண்டும். நம் செயலால் அடுத்தவர்கள் பாதிக்கப்பட்டால், இறைவன் நமக்கு அருள் எப்படி தருவார். சிந்தித்து செயல்படுவது நல்லது...

பூஜைக்கு தவிர்க்க வேண்டிய நேரம்

ஞாயிறு பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை எமகண்டம்

மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை இராகு காலம்

இரவு 6 மணி முதல் 7.30 மணி வரை எமகண்டம்

இந்த நேரங்களில் சுவாமி வழிபாடு செய்வதை தவிர்ப்பது சுபம் தரும்.

விஜய தசமி எப்போது?

மகிஷாசுரனை கொன்று மண்ணுலக, விண்ணுலகத்தினருக்கு விடுதலை வாங்கி தந்த அன்னையின் வெற்றியை கொண்டாடும் விதமாக விஜயதசமி என்ற அற்புத நாள் கொண்டாடப்படுகிறது.

இது ஐப்பசி மாதம் 10ம் தேதி தசமி திதியில் (அக்டோபர் 26) விஜயதசமி கடைப்பிடிக்கப்படுகிறது.

விஜயதசமி (கொலு எடுக்க காலை 6.00 - 7.30 மணி)

ஆயுத பூஜை அல்லது சரஸ்வதி பூஜை எந்த நாளில் கொண்டாடப்படுகிறது ?

இந்த 9 நாட்களும் பலரும் தங்கள் வீடுகளில் கொலு வைத்து, பலகாரங்கள் சமைத்து, அக்கம் பக்கத்தினருக்கு அதனை பிரசாதமாக அளித்து கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்தை குறிக்கும் வகையில் வழிபாடு செய்யப்படுவது வழக்கம். அதன் படி, 9வது நாளில் தேவி சரஸ்வதியை வழிப்படும் காரணத்தால், அன்று சரஸ்வதி பூஜை என்றும் அழைக்கப்படுகிறது.

ஆயுத பூஜையின் கொண்டாட்டத்தின் காரணம்?

கொடியன் மஹிஷாசுரன் தனது படையுடன் இணைந்து தேவி சாமுண்டேஸ்வரியை அழிக்கும் நோக்கத்துடன் சண்டையிட்டு வந்தான். இறுதியாக மஹிஷாசுரன் செய்யும் அக்கிரமங்களை பார்த்து, ஆக்ரோஷமாக அவதாரம் எடுத்தாள். அந்த அவதாரமே துர்கை அவதாரம். தனது கூர்வாள் போன்ற ஆயுதங்களை கொண்டு மஹிஷாசுரனை வதம் செய்தாள். இதன் காரணமாக ஆயுதபூஜை வழிப்பாடு காலம் காலமாக நடத்தப்படுகிறது என்று புராண கதைகள் சில கூறுகிறது.

மேலும் பிற புராண கதைகளில், குருக்‌ஷேத்திரா போருக்கு புறப்பட்ட அர்ஜுனன், தனது ஆயுதங்களை பிரயோகித்து போர் புரிந்தார். அந்த போரில் அவர் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து இத்தினம் கொண்டாடப்படுகிறது.

ஆயுதபூஜையின் வழிபாடு :
பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தங்களின் புத்தகம், பேனா, பென்சில் என அனைத்தையும் சாமி படம் முன்பு குங்குமம் பொட்டிட்டு நான்கு முனைகளிலும் மஞ்சள் பொட்டு வைத்து வழிப்படுவார்கள்.

வண்ணம் மற்றும் வாசனை நிறைந்த பூக்களால் சாமி படங்களுக்கு/விக்கிரகங்களுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தப்படும். பிறகு பொரி, பழங்கள், இனிப்பு என பல வகை பலகாரங்களை சாமிக்கு படையல் அளிப்பது வழக்கம்.

இந்த நாளில் வழிப்பட வேண்டிய மூன்று முக்கிய பெண் தெய்வங்கள் :
ஆயுதபூஜையன்று, அறிவாற்றல் அள்ளி வழங்கும் சரஸ்வதி தேவி, தூய்மை உள்ளத்தை வழங்கம் பார்வதி மற்றும் செல்வச் செழிப்பை அளிக்கும் தேவி லட்சுமி ஆகியோரை தவறாமல் வழிபட வேண்டும்.

இந்த நாளின் வழிபாட்டில், துன்பங்களும் தடைகளும் நீங்கி கல்வி, தொழில் மற்றும் வாழ்க்கையில் நல்லதையே ஆசிர்வதிக்க வேண்டும் என்று பெண் தெய்வங்களிடம் வழிப்படுவது நன்மையை உண்டாக்கும்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags