கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நாளை (அக்.2) நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதி கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
அதன்படி கடலூர், தஞ்சாவூர், விருதுநகர், திருவள்ளூர், திருநெல்வேலி, மதுரை திருச்சி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
முன்னதாக கரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 1 மற்றும் ஆகஸ்ட் 15ஆம் தேதிகளில் நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.