1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

நுரையீரல் பிரச்சனையில் உள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்..!!

 நுரையீரல் பிரச்சனையில் உள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்..!!


மனித உடலில் நுரையீரல் என்பது மூச்சுக் காற்றை உள்ளிழுத்து வெளிவிடும் ஓர் முக்கியமான உள்ளுறுப்பு. நாம் சுவாசிப்பதே இந்த உறுப்பால் தான். சொல்லப்போனால் நுரையீரலின் பணியும் இது தான். நல்ல சுத்தமான காற்றை சுவாசித்தால், நுரையீரலில் எவ்வித பிரச்சனையும் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் தற்போது சுத்தமான காற்று என்பது அரிய வளமாக மாறி வருகிறது. அதோடு தற்போது கொடிய கொரோனா வைரஸ் பரவி வருவதால், முன்பை விட நம் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 


பொதுவாக நமது உடலுறுப்புக்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது நமக்கு ஒருசில அறிகுறிகளை உணர்த்தும். அதிலும் நமது நுரையீரலில் பிரச்சனை இருந்தால், அது நமக்கு சில அறிகுறிகளை வெளிக்காட்டும். அவற்றை நாம் சாதாரணமாக நினைத்து விட்டுவிடாமல், கவனம் செலுத்தி உடனே சிகிச்சை மேற்கொண்டால், உங்கள் உயிரைக் காப்பாற்ற முடியும். கீழே நுரையீரல் பிரச்சனையில் இருந்தால் வெளிப்படும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதோடு ஆரோக்கியமான நுரையீரலுக்கு பின்பற்ற வேண்டிய சில விஷயங்களும் போனஸாக கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பாருங்கள்.


முதுகு மற்றும் தோள்பட்டை வலி: முதுகு, தோள்பட்டை அல்லது மார்பு பகுதியில் வலியை சந்திப்பது நுரையீரல் புற்றுநோயின் ஆரம்பத்தைக் குறிக்கலாம். ஒருவர் ஆரம்பத்திலேயே இந்த வலியைக் கவனித்து சிகிச்சை மேற்கொண்டால், நுரையீரல் புற்றுநோய் இருந்தால் கூட சரிசெய்துவிடலாம். ஒருவேளை இந்த வலி வலுவானதாகவும், வழக்கமான முதுகு வலியை விட இருந்தால் அல்லது அடிக்கடி இம்மாதிரி சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுவதே நல்ல யோசனை.


இருமல்: இருமல் ஒரு சாதாரணமான ஒன்றாக இருக்கலாம். ஆனால் அடிக்கடி அல்லது நீண்ட காலமாக இருமலை சந்தித்தால், அது ஒரு நாள்பட்ட நுரையீரல் நோயின் அறிகுறியாக இருக்கலாம். இருமலில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையான இருமல்களை எவ்வாறு வேறுபடுத்துவது என்பதை அறிந்திருப்பது நல்லது. கடுமையான இருமல் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக இரத்தம் கலந்த சளி வெளியேற்றத்துடனான இருமலை சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவதே நல்லது.


மூச்சுத்திணறல்: மூச்சுத் திணறல், ஒருவருக்கு ஆஸ்துமா அல்லது ஒவ்வாமை போன்ற இதயம் அல்லது நுரையீரல் பிரச்சனைகளால் ஏற்படுகிறது. நீங்கள் இந்நிலையை அனுபவிப்பவராக இருந்தால், உங்கள் சூழலை மாற்றி, சிறிது காலம் மாசடைந்த நகரத்தில் இருந்து வெளியேறி இருப்பது அல்லது திறமையான உடற்பயிற்சி வழக்கத்தை முயற்சிப்பது நல்லது. ஆனால் நீங்கள் அடிக்கடி மூச்சுத்திணறலை சந்தித்தால், உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்வதே நல்லது.


மஞ்சள் நிற கண்கள்: இது பலரும் எளிதில் நிராகரிக்கக்கூடிய நிலையாக இருக்கலாம். ஆனால் இது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில் இது நுரையீரல் புற்றுநோயால் ஏற்படக்கூடிய கல்லீரல் பிரச்சனையின் தெளிவான அறிகுறியாகும். மஞ்சள் காமாலை என்பது உங்கள் சருமத்தை மஞ்சள் நிறமாக மாற்றும் ஒரு நிலை. இது உங்கள் கண்ணின் வெள்ளை பகுதியை வெளிரிய மஞ்சள் நிறமாக மாற்றுகிறது மற்றும் கடுமையான நிலையில், அடர் மஞ்சள் நிறமாக மாற்றும்.


*ஆற்றலின்மை / சோர்வு: அனைவருமே அவ்வப்போது சோர்வை உணர்வோம். இது சாதாரணமான ஒன்று தான். தூக்கமின்மை அல்லது மன அழுத்தம் கூட ஒருவரது சோர்வுக்கு காரணமாக இருக்கலாம். ஆனால் அடிக்கடி வழக்கத்திற்கு மாறாக சோர்வை உணர்வதுடன், இருமல் மற்றும் பசியின்மையையும் அனுபவித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். இது நுரையீரலில் இருக்கும் பிரச்சனையின் அறிகுறியாகும்.


நுரையீரல் ஆரோக்கியம்: நுரையீரல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஆராய்ச்சிகள் உறுதிபூண்டுள்ளன. அந்த செயல்பாட்டுடன், பல இணையத்தளங்கள் நுரையீரல் சுத்தம் பற்றி பல கட்டுக்கதைகளை உருவாக்கியுள்ளன. ஆனால் நுரையீரலை விரைவில் சுத்தம் செய்வதற்கான எந்த ஒரு தீர்வும் இல்லை. ஆகவே தான் கெட்ட பழக்கங்களை கைவிட முதலில் அறிவுறுத்தப்படுகிறது.


கெட்ட பழக்கங்களை தவிர்த்திடுங்கள்: புகைப்பிடிப்பதை நிறுத்துவது மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பது போன்றவை நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் மிக வெளிப்படையான பழக்கமாகும். மேலும் இவை மிகவும் பயனுள்ளவையும் கூட. ஒருவேளை நீங்கள் நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனையுடன் வாழ்க்கிறீர்கள் என்றால், ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட முயற்சி செய்யுங்கள்.


*உடற்பயிற்சி செய்யுங்கள்: இதுவரை நீங்கள் உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால், இனிமேல் தினமும் உடற்பயிற்சி செய்து சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள். இது உங்கள் நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். நாள்பட்ட நோய் இருந்தால் வருத்தம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் வழக்கத்தை மாற்றும் முன் உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். முக்கியமாக ஆஸ்துமா உள்ளவர்கள் கூட மாரத்தான் ஓட்டத்தை மேற்கொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Share:
  • Related Posts:

    No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags