அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:-
பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் என்று கோரி போராடியபோது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் எடப்பாடி பழனிசாமி அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்
2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல்-அமைச்சரின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்பிய அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பழிவாங்கும் நோக்கத்தோடு அவர்கள் மீதான குற்ற குறிப்பாணைகளையும், வழக்குகளையும் கைவிடாமல் இருப்பது சரியானதல்ல.
இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, பணி ஓய்வு, அதற்கு பிந்தைய பலன்கள் என எதையும் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இப்பிரச்சினையில் தமிழக அரசு மனிதநேயத்துடனும், மனசாட்சியோடும் நடந்து கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.