1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

மனிதர்களைவிட விலங்குகள் (Animals) இரவில் சிறப்பான (Better vision at night) பார்வைத்திறனை கொண்டிருப்பதேன்

🔥அறிவியல்-விளக்கம்🔥
💐மனிதர்களைவிட விலங்குகள் (Animals) இரவில் சிறப்பான (Better vision at night) பார்வைத்திறனை கொண்டிருப்பதேன்.💐
🏵பதில்🏵
👉விலங்குகள் தண்டுசெல்லை (rod cell) விழித்திரையிலும் (retina) மற்றும் "டேபட்டம் லூசிடம்"(tapetum lucidum) என்ற தடித்த ஒளிவிலகல் சவ்வினை விழித்திரைக்கு பின்னாலும் கொண்டுள்ளன.இதுவே சிறந்த பார்வைத்திறனை இரவில் விலங்குகளுக்கு வழங்குகிறது.
👉தண்டு செல்லில் உள்ள "ரோடோப்சின்"(Rhodopsin) என்ற பார்வை நிறமியானது குறைந்த அளவிலான ஒளிக்கு உணர்திறன் கொண்டிருப்பதால் இருட்டில் சிறப்பான பார்வைத்திறனை வழங்குகிறது.
👉டேபட்டம் லூசிடம் என்ற சவ்வானது விழித்திரை வழியாக புலப்படும் ஒளியை மீண்டும் எதிரொளிப்பதால் ஒளி ஏற்பிக்கு  (photoreceptor) கிடைக்கும் ஒளியின் அளவை அதிகரிக்கிறது. இதனால் குறைந்த ஒளி சூழ்நிலையிலும் லூசிடம் சவ்வு பார்வைத்திறனை மேம்படுத்துகிறது.
🏵இரவில் நடமாடும் விலங்குகள் (nocturnal animals)🏵
👉இரவில் சுறுசுறுப்பாக இயங்கி பகல்நேரத்தில் தூங்கும் தன்மையே இரவில் நடமாடும் விலங்குகளின் பண்பாகும்.
👉இரவில்நடமாடும் விலங்குகள் தண்டு செல்களை (rod cell) மட்டுமே கொண்டுள்ளது. ஏறக்குறைய கூம்பு செல்களே (cone cells) இல்லை எனலாம்.
இதனால் நிறங்களை உணரக்கூடிய திறன் இல்லாமல் போகின்றது.
👉இரவில் நடமாடும் பறவையான ஆந்தையானது சிறப்பான பார்வையினால் இரவில் உணவிற்காக சிள்வண்டு(cricket),தவளைகள் (frogs) கொறித்துண்ணி ஆகியவற்றை (rodents) இரவில் வேட்டையாடுகின்றது.
👉குழி விரியன் பாம்பு (pit viper snake) இரவில் வேட்டையாடுவதை விரும்புகின்றது.
🔥மேலும் அறிக🔥
👉மான், நாய், பூனை, கால்நடைகள்(cattle),குதிரைகள் மற்றும் மரநாய்கள் (ferrets) போன்றவை "டேபட்டம் லூசிடம்" சவ்வினைக் கொண்டுள்ளன. ஆனால் மனிதர்கள் கொண்டிருக்கவில்லை.
👉லூசிடம் சவ்வு இரவு நேரங்களில் விலங்குகளுக்கு வெள்ளை,நீலம்,மஞ்சள்,பச்சை,இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிற கண்ணொளிர்வை
 (Eyeshine) விலங்குகளுக்கு ஏற்படுத்துகிறது.
👉மீன்களில் வெள்ளைநிற கண்ணொளிர்வு (white eyeshine) ஏற்படுகிறது.
👉நாய்களில் மஞ்சள்நிற கண்ணொளிர்வு, பறவைகளில் சிவப்புநிற கண்ணொளிர்வு,பூனைகளில் பிரகாசமான பச்சைநிற கண்ணொளிர்வு மற்றும் மஞ்சள்நிற கண்ணொளிர்வும் இரவில் விலங்குகளுக்கு ஏற்படுகிறது.
🙏நன்றி
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags