💐மேல்வானத்தைவிட (in high sky) அடிவானத்தில் (horizon) சந்திரன் (moon) உள்ளபோது பெரியதாக தெரிவதேன் (bigger in size)💐
🏵பதில்🏵
👉ஒளியியல் திரிபுக் காட்சி (optical illusion) காரணமாக சந்திரன் (moon) மேல்வானத்தில் (in high sky) உள்ளதைக் காட்டிலும் அடிவானத்தில் (Horizon) உள்ள போது பெரியதாக உள்ளது போல் தோற்றமளிக்கிறது.
இது சந்திரன் திரிபுக்காட்சி (moon illusion) எனப்படுகிறது.
👉உண்மையில் மேல்வானம் மற்றும் அடிவானம் இரண்டிலும் சந்திரன் ஒரே அளவாகவே (same size) உள்ளது.
(ஒளியியல் திரிபுக்காட்சி என்பது இயல்பான உண்மைநிலையிலிருந்து வேறுபட்ட படங்களை காட்டுவதாகும்.)
🏵திரிபுக்காட்சி (illusion)🏵
👉சந்திரன் மேல்வானத்தில் உள்ளபோது அதற்கு எதிரேயுள்ள மேகங்கள் சந்திரனைவிட பார்வையாளருக்கு நெருக்கமாகவுள்ளது.
அதனால் அருகிலுள்ள பெரிய மேகங்களை ஒப்பிடுகையில் சந்திரன் சிறியதாக தோற்றமளிக்கிறது.
👉சந்திரன் அடிவானத்தில் இருக்கும்போது அதே மேகங்கள் நம்மை ஒப்பிடும்போது அதிக தொலைவில் இருக்கும்.இதனால் மேகங்கள் சிறியதாகவும் அடிவானத்திலுள்ள சந்திரன் பெரியதாகவும் தோற்றமளிக்கிறது.உண்மையில் சந்திரன் திரிபுக்காட்சியினாலேயே பெரியதாக தோற்றமளிக்கிறது.
🏵திரிபுக்காட்சிக்கான ஆதாரம்🏵
👉தளமட்டக் கோணமானியைக் (Theodolite) கொண்டு சந்திரன் மேல்வானம் மற்றும் அடித்தளவானத்தில் உள்ளபோது அதன் கிடைத்தள மற்றும் செங்குத்துநிலை கோணங்களை அளந்தறியும் போது இரண்டு நிலைகளும் ஒரே மதிப்பை பெற்றுள்ளன.இது சந்திரன் அளவு மாறாமல் இருப்பதைக் காட்டுகிறது.
👉சந்திரன் வானத்தில் வெவ்வேறு நிலையில் உள்ளபோது எடுக்கப்பட்ட சந்திரனின் புகைப்படங்களின் அளவு மாறாமல் உள்ளது.இது சந்திரன் வேறுபட்ட நிலையில் ஒரே அளவில் உள்ளதைக் காட்டுகிறது.
🔥மேலும் அறிக🔥
👉கணினியின் திரை, ஒரு ஒளியியல் திரிபுக்காட்சியாகும்.
திரையானது சிறிய சிவப்பு,பச்சை மற்றும் நீல நிற புள்ளிகளால் ஆனது.ஒளியியல் திரிபுக்காட்சியே சிவப்பு,பச்சை,நீல நிறம் மட்டுமல்லாமல் ஏராளமான வண்ணங்களை நம்மை உணரச் செய்கின்றது.
👉இல்பொருள்காட்சி (Hallucination) என்பது இல்லாத ஒன்றை இருப்பதாக காணும் நிகழ்வாகும்.
🙏நன்றி
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.