🔥அறிவியல்-விளக்கம்🔥
💐தொலைவில் உள்ள பொருளை (Distance object) காணும் போது சிறியதாக (appear to be smaller) தோற்றமளிப்பதேன்💐
👉அருகில் பொருளை காணும் போது பெரியதாகவும் (appear bigger in size) அதே பொருளை தொலைவில் காணும் போது சிறியதாகவும் (appear smaller in size) தோற்றமளிக்கிறது.
👉தொலைவில் உள்ள பொருள் சிறிய அளவில் தோற்றமளிப்பதற்கான காரணம் பொருளின் பார்வை கோணமே ஆகும் (visual angle).
(பார்வை கோணம்(visual angle): விழித்திரையில் உள்ள பொருளின் அளவைக் குறிக்கிறது)
🏵விளக்கம்🏵
👉பொருளுக்கு இரண்டு அளவுகள் உள்ளன.அவை 1.உண்மை அளவு (actual size) 2.தோற்ற அளவு (apparent size)
👉பொருளின் உண்மை அளவை மீட்டர் (meter) அல்லது அடி (feet) கொண்டு அளவிடலாம்.பொருளின் உண்மை அளவு இடத்திற்கு இடம் மாறுபடுவதில்லை.
👉பொருளின் தோற்ற அளவு பொருளின் நிலையை பொறுத்து மாறுபடக்கூடியது.
👉ஒரு பொருள் 100 மீ தொலைவிலிருந்து காணும் போது ஒரு தோற்ற அளவை கொண்டிருக்கிறது.அதே பொருளை 500 மீ தொலைவிலிருந்து காணும் போது அதைவிட குறைந்த தோற்ற அளவை கொண்டிருக்கிறது. இதன்பொருள் 100 மீ தொலைவிலிருப்பதைவிட 500 மீ தொலைவில் உள்ளபோது பொருள் சிறியதாக தோற்றமளிக்கும் என்பதாகும்.
👉பொருளின் தோற்ற அளவானது கோணத்தைச் (angle) சார்ந்துள்ளது.இதனை டிகிரியில் (degree) அளந்தறியலாம்.
👉பார்வைக்கோணமே பொருளின் தோற்ற அளவை நிர்ணயிக்கிறது.
👉பார்வை கோணத்தை தளமட்டக் கோணமானியை (Theodolite) பயன்படுத்தி நேரடியாக அளந்தறியலாம்.
👉பொருள் அருகாமையில் உள்ளபோது பார்வைக்கோணம் அதிகமாகவுள்ளதால் பொருள் பெரியதாக தோற்றமளிக்கிறது.
👉பொருள் தொலைவில் உள்ளபோது பார்வைக் கோணம் குறைவாகவுள்ளதால் சிறியதாக தோற்றமளிக்கிறது.
👉கணிதவியல் சூத்திரத்தின்படி
தோற்ற உயரம்=(உண்மையான உயரம்/தொலைவு)
மேற்கண்ட தொடர்பின்படி தோற்ற உயரமும் ,தொலைவும் எதிர்விகிதத்தில் தொடர்புடையது.
👉எனவே தொலைவிலுள்ள பொருள் சிறியதாக தோற்றமளிக்கிறது.
🔥மேலும் அறிக🔥
👉இரவில் காணும் நட்சத்திரங்கள் மிகச்சிறியதாக தோன்ற காரணம் பார்வை கோணத்தின் மிகச்சிறிய மதிப்பேயாகும்.
(நம் பூமியிலிருந்து நட்சத்திரங்கள் குறைந்தபட்சம் 4 ஒளியாண்டுகள் தொலைவிற்கு அப்பால் இருப்பதுடன், அளவில் ~7 lakh km ஆரத்தை கொண்டுள்ளன)
🙏நன்றி
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.