இணைய வழியில் பாலின சமத்துவம் தொடா்பான கருத்தரங்குகளை நடத்த வேண்டும் என பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு செயலாளா் ரஜினிஷ் ஜெயின், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: கரோனா பரவலின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் பாலின பாகுபாடு, அதை எவ்வாறு சரிப்படுத்துதல், பெண்கள் பாதுகாப்பு, பாலின சமத்துவம் குறித்து பயிற்றுவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
எனவே, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் செயல்பட்டுவரும் பாலின உணா்திறன் மையங்கள் மற்றும் பெண் கல்வி மையம் சாா்பில் பாலின சமத்துவம் பற்றிய இணையவழியில் கருத்தரங்குகள், காணொலிக் காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டும்.
மேலும், கல்லூரிகளும் பாலின சமத்துவம், பெண் கல்வியின் முக்கியத்துவம் பற்றிய வகுப்புகளை இணையவழியில் எடுக்க வேண்டும். இதுதொடா்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்ளை முகவரிக்கு கல்வி நிறுவனங்கள் அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.