வீட்டிலிருந்து பணியாற்றும் பெரும்பாலான பணியாளர்கள் மடிக்கணினி மூலம் பணியாற்றுவதால் அவர்கள் சந்திக்கும் தலையாய பிரச்னைகளாக முதுகு வலி, கழுத்துவலி, கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது தலைத்தூக்கி நிற்கின்றன. ஆகவே இதனை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்த விளக்கங்களை Dr.s.Mohan kumar M.s.Ortho.,D.ortho அவர்களிடம் கேட்டோம். அவர் அளித்த விளக்கங்கள் பின்வருமாறு:- | ||||||||
ஊரடங்கு காலத்தில் பணியாளர்கள் அதிகம் சந்திக்கும் பிரச்னைகளாக கழுத்து மற்றும் முதுகு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் மாறியிருக்கிறதே? | ||||||||
உண்மைதான். அதற்கு மிக முக்கியமான காரணம் பணியின்போது உபகரணங்களை அவர்கள் பயன்படுத்தும் முறை. பெரும்பாலான பணியாளர்கள் மடிக்கணியை மடியில் வைத்தோ, அல்லது கட்டிலில் வைத்தோ பயன்படுத்துகின்றனர். இந்தப் பணி முறை நிச்சயம் அவர்களுக்கு பிரச்னைகளை உண்டாக்கும். ஆகவே அதனை தவிர்த்து மடிக் கணினியானாது சரியாக நமது கண் புள்ளிக்கு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நாம் கழுத்து சம்பந்தமான பிரச்னைகளை தவிர்க்கலாம். | ||||||||
இன்னொன்று நாற்காலி... அவர்கள் அமர்ந்திக்கும் நாற்காலி 90 டிகிரி அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இது மட்டுமன்றி அந்த நாற்காலி பின் சாய்வு வசதி கொண்ட நாற்காலியாக இருத்தல் மிக முக்கியமானது. பின் சாய்வு இல்லாத நாற்காலிகளை நாம் பயன்படுத்தும்போது நிச்சயம் நமக்கு முதுகு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரும். | ||||||||
மேலும் தொடர்ந்து எட்டுமணி நேரம் ஒரே இடத்தில் பணியாற்றும் நபர்கள் 40 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து சென்று ஒரு ஐந்து நிமிடம் சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் அவர்கள் இன்னும் சுறுசுறுப்பாக பணியாற்ற முடியும். இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் கண். தொடர்ந்து 8 மணி நேரம் மடிக்கணினியை பார்த்துக் கொண்டிருக்கும் நாம் ஒரு குறிப்பிட்ட அசைவுகளில் மட்டுமே கண்களை பயன்படுத்துகிறோம். அப்படி பயன்படுத்தும்போது கண்களில் உள்ள தசைகள் இறுகி விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனாலும் கண் சம்ந்தப்பட்ட பிரச்னைகள் வரும். ஆகவே கண்களுக்கு நாம் சில பயிற்சிகளை கொடுப்பது மிக அவசியமானதாக இருக்கிறது. ஊரடங்கு காலத்தில் உடற்பயிற்சி அவசியமா?
|
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.