கடந்த ஆண்டு பாட திட்டத்தில் உள்ள பாடங்களை குறைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபிச்செட்டிப்பாளையத்தில் 150 புகைப்பட கலைஞர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாட புத்தகங்கள், வரும் 30 ம் தேதிக்குள் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பப்படும் என கூறினார்.
கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி வேலை நாட்கள் குறைந்துள்ளதால், கடந்த ஆண்டு பாட திட்டத்தில் உள்ள பாடங்களை குறைக்க அமைக்கப்பட்டுள்ள 18 பேர் கொண்ட குழுவின் அறிக்கையை பெற்று, அதன் அடிப்படையில், பாடதிட்டங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.