1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

கொரோனா அலட்சியம் ஆபத்து -மிஸ் பண்ணாம படிங்க!


கொரோனாஅலட்சியம்ஆபத்து
சமீபத்தைய சில மரணங்கள் நமக்கு நேரடியாக சில செய்திகளை விட்டு செல்கின்றன. 

1 - திரு. அன்பழகன் MLA (62). இவருக்கு எந்தவிதத்திலும் பணத்திற்கு குறைவில்லை. எந்தவித உயர்தர வைத்தியமும் பார்க்க முடியும். ஆனால் கொரோனாவிடம் ஜெயிக்க முடியவில்லை. 

2 - திரு. சரத் ரெட்டி (43). இவர் இந்தியாவின் டாப் 25 மற்றும் சென்னையின் டாப் 10 மருத்துவமனைகளில் ஒன்றான விஜயா மருத்துவமனையின் இயக்குநர். ஒரு பெரிய மருத்துவமனையின் இயக்குநர் என்றால் அந்த மருத்துவமனையில் அவருக்கு எந்த மாதிரியான வைத்தியம் பார்த்திருப்பார்கள் என நம்மால் எளிதாக யூகிக்க முடியும். ஆனாலும் கொரோனாவிடம் ஜெயிக்க முடியவில்லை. 

3 - திரு. பாலகிருஷ்ணன் (55). இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் தொழிற்சாலையின் தலைவர். இவருக்கு உலகின் எவ்வளவு பெரிய மருத்துவமனையின் வைத்தியத்தையும் பெற வசதியிருக்கிறது. ஆனாலும் கொரோனாவிடம் ஜெயிக்க முடியவில்லை. 

இதுபோல நிறைய உதாரணங்களை தரமுடியும். நமக்கு தெரிந்த நம் அருகாமையிலுள்ள ஆளுமைகளின் கதை இவை. 

இதிலிருந்து நமக்கு புரியும் பாடம் ஒன்றுதான். கொரோனாதானே, ஜஸ்ட் மருத்துவமனைக்கு போய் நான்கு நாட்கள் படுத்திருந்துவிட்டு வந்தால் குணமாகிவிடப் போகிறதல்லவா என்ற அலட்சிய மனப்பான்மை கூடாதென்பதே அது. 

அரசுகளை லாக்டவுன் ஏன் செய்தார்கள்,  லாக்டவுனை ஏன் ஓப்பன் செய்தார்கள் என்றெல்லாம் குறை சொல்வதோடு மட்டும் கடந்துவிடாமல் (அதற்காக இதை நிறுத்தவேண்டாம். அரசுகள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவது நம் கடமை) நம் ஜாக்கிரதையை, முன்னெச்சரிக்கையை நாம் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியம். நமக்கு தொற்று வந்து மருத்துவமனைக்கு போய் நாமும் போய்சேர்ந்தால் நம் குடும்பத்திடம்கூட நம்மை தராமல் ஏதோ ஒரு குழியில் மேலேயிருந்து டமால் என தூக்கி போட்டுவிட்டு (மெதுவாக உடம்பு வலிக்காமல் கீழே இறக்குவார்கள் என்றெல்லாம் எதிர்பார்க்காதீர்கள்) போய்விடுவார்கள். 

எனவே நாம் கடைபிடிக்கும் சுய கட்டுப்பாடும், சுத்தமும் மட்டுமே நம்மை காப்பாற்றும். 
எனவே,
🚫 மிக மிக மிக மிக அத்தியாவசிய தேவையின்றி வெளியில் போகாதீர்கள். 

🚫 அப்படியே போக நேர்ந்தாலும் முகக்கவசம், கையுறை இல்லாமல் போகாதீர்கள்

🚫 எந்த வெளி நபரை சந்தித்த பின்னும் மறக்காமல் சோப்பு, handwash போன்றவை போட்டு நன்றாக கையை கழுவவும்

🚫 வீட்டில் இருப்பதை வைத்து உண்ண பழகுங்கள். கொரோனா பிரச்சனை தீர்ந்தவுடன் விருந்து சாப்பிட்டுக் கொள்ள(ல்ல)லாம்

🚫 லேசான அறிகுறிகளாக இருந்தாலும் அலட்சியப்படுத்தாமல் உடனே நடவடிக்கை எடுங்கள். 

🚫 எதிர்ப்புசக்தி அதிகரிக்கும் உணவுகளை நறைய எடுத்துக்கொள்ளுங்கள்

🚫 தொண்டையை மிக ஜாக்கிரதையாக பார்த துக்கொள்ளுங்கள் (இஞ்சி சாறு போன்றவற்றை தினமும் எடுப்பது நல்லது)

இன்னும் ஏதாவது உபாயங்கள் இருந்தாலும் பயன்படுத்துங்கள். தயவுசெய்து அலட்சியம் வேண்டாம்!!!❤️🙏
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags