சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தற்போது மாணவர்கள் தேர்வு எழுத சென்றால் கொரோனா பரவல் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதால் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் மாணவர்களின் செயல்முறை தேர்வு மற்றும் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்த தகவலில், தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வியாழக்கிழமையன்று இது குறித்த அறிக்கையை சமர்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து இன்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அளித்துள்ள தகவலில், சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தேர்வுகளை நடத்த இயலாத சூழல் உள்ளது. எனவே மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் ஜூலை மாதம் திட்டமிடப்பட்ட சி.பி.எஸ்.இ. 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.