TN 12th Std Re-Exam 2020 Tamil Nadu 12th (HSC) Public Exam - பிளஸ் 2 தேர்வு எழுதாத 34,872 மாணவர்களுக்கு மறுதேர்வு: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
கோபி: பிளஸ்-2 தேர்வு எழுதாத 34,872 மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த முடிவு செய்து உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணி 75 சதவீதம் முடிந்துள்ளது. மீதி பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், துறை அலுவலர்கள் நடத்தை விதிமுறைகள் அடிப்படையில் கருத்துகளை வெளியிடக்கூடாது. இதை கட்டுப்படுத்த உத்தரவிடப்பட்டது.
அனைவரும் தேர்ச்சி என முதலமைச்சர் அறிவித்துள்ளதால் 10ம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளது. சில பள்ளிகளில் ஆன்லைன் மூலமாக தேர்வு நடைபெறுவதாக புகார் வந்துள்ளது. அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மாத்தூர் என்ற இடத்தில் ரேங்க் கார்டில் கையெழுத்து போடவே மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். அவர்கள் தேர்வு எழுத வரவில்லை. 10ம் வகுப்பிற்கு வழங்கப்படும் மதிப்பெண்கள் குறித்து குழு அறிக்கை பெற்ற பிறகு முடிவு செய்யப்படும்.
12ம் வகுப்பை சேர்ந்த 34,872 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இவர்களுக்கு மறு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 25ம் தேதிக்குள் மாணவர்கள், பெற்றோர்களிடம் தேர்வு எழுத விருப்பம் உள்ளதா? என்பது குறித்து கடிதம் மூலம் கருத்து கேட்கப்பட உள்ளது. அவர்களிடம் இருந்து பதில் கிடைத்தவுடன் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.