இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் உருவான கொரோன தொற்று இன்று வரை நாளுக்கு நாள் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றன. இந்த வைரஸ் தொற்றின் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் அனைத்து மாநிலங்களுக்கும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. கொரோன தொற்று காரணமாக மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க பள்ளிகள் மற்றும்
கல்லூரிகள் அலுவலகம் மற்றும் வழிபட்டுத் தலங்கள் ஆகியவை திறக்க தடை செய்யப்பட்டு உள்ளன. இருப்பினும் தற்போது தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்து, அனைத்து மாணவர்கள் தேர்ச்சி என்று அரசு தெரிவித்து இருந்தன.
வைரஸ் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தன. இந்நிலையில்
தற்போது கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளை தற்போது திறக்க முடியாது சூழல் நிலவி வருகிறது. மற்றும் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழையால் வைரஸ் பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதன் காரணங்களால் அக்டோபர் மாதம் வரை பள்ளிகளை திறப்பது என்பது சாத்தியம் இல்லை என்றும் மற்றும் கல்வி ஆண்டின் காலத்தை மாற்றி
அமைக்க வேண்டும் என்றும் பள்ளி முதல்வர்கள் அனைவரும் ஒருங்கிணைத்து ஆன்லைன் மூலமாக சென்னை மற்றும் மும்பை மற்றும் டில்லியில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் பங்கேற்று நடத்திய ஆலோசனை மற்றும் கருத்துக்கேட்பு கூட்டத்தில் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.