10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்ள, அக்.,1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் சண்முகம் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: 4ம் கட்ட ஊரடங்கு தளர்வின் போது, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே, செப்.,21ம் தேதி முதல், ஆன்லைன் வகுப்புகளுக்கும், அதுசார்ந்த பணிகளுக்காகவும் 50 சதவீத ஆசிரியர்களை அழைத்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. மேலும், கடந்த 8ல் பள்ளிகளை திறக்க சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள், விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களிடம் சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் எனக்கூறியுள்ளது.
இதனால், அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 10 முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு சென்று சந்தேகங்களை தீர்த்து கொள்ள அனுமதி வழங்கலாம் எனவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ள பள்ளிகளில் சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர்கள் 50 சதவீதம் பேர் பள்ளிக்கு வந்து மாணவர்களின் சந்தேகங்கள் தீர்ப்பதுடன், ஆலோசனைகளை வழங்கலாம் என பள்ளிகல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது.
இதனை ஏற்று, வரும் 1ம் தேதி முதல், 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள், பள்ளிக்கு செல்ல அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்களை குழுக்களாக பிரித்து வெவ்வேறு நாட்களில் பள்ளிக்கு வரவழைக்கலாம். ஒவ்வொரு ஆசிரியர் குழுவும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பள்ளிக்கு வரலாம். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.