1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

இறுதியாண்டு 'செமஸ்டர்' தேர்வு, தேதி அறிவித்தார் -அமைச்சர்

 


பள்ளி, கல்லுாரிகள் எப்போது திறக்கப்படும் என அரசு இன்னும் அறிவிக்காத நிலையில், கல்லுாரி மாணவர்களுக்கு 'ஜாக்பாட்' அடித்ததை போல அமைந்தது முதல்வர் பழனிசாமியின் சமீபத்திய அறிவிப்பு. இறுதியாண்டு 'செமஸ்டர்' தேர்வு தவிர, மற்ற அனைத்து பருவ தேர்வுகள், அரியர் தேர்வுகள் எழுத கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என அறிவித்தார்.


இந்நிலையில், இறுதியாண்டு 'செமஸ்டர்' தேர்வு, செப்.,15ம் தேதிக்கு பின் நடைபெறும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், 'இறுதியாண்டு மாணவர்கள் நேரில் வந்து தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. விரைவான தேர்வு அட்டவணை, தேர்வு மையங்கள் விரைவில் வெளியிடப்படும். மாணவர்கள் தேர்வுக்கு, தங்களை தயார் படுத்தி கொள்ளுங்கள்' என அறிவுறுத்தியுள்ளார்.


பி.ஆர்க்., மாணவர் சேர்க்கை:


பி.ஆர்க் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு செப்.,7 ல் துவங்குகிறது. பி.ஆர்க் இளநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். www.tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags