1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

அதிக சத்துகள் நிறைந்த முட்டை வெள்ளைக்கரு: விவரம் இதோ..!


Image

முட்டை மஞ்சள் கருவை விட வெள்ளைக் கருவில் கூடுதல் சத்துக்கள் காணப்படுகின்றன. 

முட்டையில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. இதனை நீங்கள் காலை உணவாக எடுத்துக் கொண்டால் ஏராளமான நன்மைகள் உண்டு. இதனை விதவிதமாக தயாரித்து கூட சாப்பிடலாம். குறிப்பாக அதில் உள்ள வெள்ளைக்கரு உடலுக்கு அதிக நன்மைகளை கொடுக்கக் கூடியது. இதில் குறைந்த அளவிலான கலோரி மற்றும் கொழுப்புகளே காணப்படுகின்றன. அதிக கொழுப்பு சத்து உள்ளவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை தவிர்க்கலாம். வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடுவதால் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் வாய்ப்பு குறைவு. இதில் உள்ள வேறு சில சத்துக்களையும், பயன்களையும் பார்ப்போம்.

புரதம்:
ஒட்டு மொத்த முட்டையிலும் அதிக அளவிலான புரதங்கள் நிறைந்துள்ளன. இருப்பினும் வெள்ளைக்கருவில் குறைந்த கொழுப்பும், அதிக புரதமும் உள்ளதால் அதனை நீங்கள் தேர்வு செய்யலாம். மேலும் அடிக்கடி பசி உணர்வு ஏற்படுவதையும் இது தடுக்கும். இதுமட்டுமல்லாமல் இதில் வைட்டமின் பி12 சத்தும் நிறைந்துள்ளது.

குறைந்த கலோரி:
முட்டையில் அதிக அளவிலான கலோரிகள் காணப்படுவதில்லை. ஆனால் வெள்ளைக்கருவை மட்டும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் போது இன்னும் குறைந்த அளவிலான கலோரிகளை மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும். அதனால் நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்பினால், மஞ்சள் கருவை தவிர்த்து விடுங்கள்.


ரத்த அழுத்தம்:
வெள்ளைக்கருவில் உள்ள பொட்டாசியம் சத்து ரத்த அழுத்தத்தை குறைக்கவும், பராமரிக்கவும் உதவும். இதுமட்டுமல்லாமல் இதயம் மற்றும் எலும்புகள் ஆரோக்கியமாக செயல்படுவதற்கும் இது பயன்படுகிறது. அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி ஆய்வின்படி, முட்டையின் வெள்ளைக்கருவில் RVPS எனப்படும் பெப்டைட் உள்ளது என கூறியது. இது புரதத்தின் அங்கமாகும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

இதய நோய்கள்:
பொட்டாசியம் ரத்த அளவைக் குறைக்க உதவுவதால் இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்க முடியும். அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவு. இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்க முட்டையின் வெள்ளைப் பகுதியை நீங்கள் நிச்சயம் சாப்பிடலாம்.


வைட்டமின்கள்:
இதில் வைட்டமின்கள் A, B12, D போன்றவை காணப்படுகின்றன. எலும்புகள் வலுவாக இருப்பதற்கு வைட்டமின் D உதவும். மேலும் இதில் உள்ள வைட்டமின் B2 மிக முக்கியமானது. கண்புரை, ஒற்றை தலைவலி ஏற்படாமல் தடுக்க இது பயன்படுகிறது.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags