1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

சரும பராமரிப்புக்கு உதவும் மஞ்சள்: சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

 

சரும பராமரிப்புக்கு உதவும் மஞ்சள்: சில எளிய வீட்டு வைத்தியங்கள்!


உடல் ஆரோக்கியம் மற்றும் சரும பராமரிப்பில் மஞ்சளின் பங்கு மிக மிக முக்கியமானது. 

இயற்கையான கிருமிநாசினி போல் மஞ்சள் செயல்படுகிறது. உடல்களை பல்வேறு நோய்த்தொற்றுகளில் இருந்து விலக்கி வைக்க மஞ்சள் உதவுகிறது. அதேபோல் முகத்தில் உள்ள கிருகிகளை அகற்றி பொலிவுடன் வைக்கவும் மஞ்சளை தினமும் கூட பயன்படுத்தலாம். இதனை பயன்படுத்தும் சில சுவாரஸ்யமான ஹேக்குகளை தற்போது பார்க்கலாம்.

பெரும்பாலான பெண்கள் மேக் அப்பிற்கு Foundation பயன்படுத்துவார்கள். ஒரு சிலரது நிறத்துக்கு Foundation சரிவர பொருந்தாமல் இருக்கும். இதனால் அதனை போடும் போது அவர்களுக்கு திருப்தி இருக்காது. ஆனால் மஞ்சள் வைத்து இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரலாம். சிறிது Foundation எடுத்து அதில் மஞ்சள் தூள் கலந்து கொள்ளுங்கள். நிறம் மாறியவுடன் அதனை கைகளில் தடவி  உங்கள் நிறத்திற்கு ஒத்துக் போகிறதா என பார்த்தவுடன், முகத்தில் தடவி கொள்ளுங்கள். இதன் மூலம் முகத்திற்கு இயற்கையான பொலிவு கிடைக்கும்.

Tur

அதேபோல் முகப்பருக்கள், வடுக்களை அகற்றவும் மஞ்சள் பயன்படுகிறது. அரை டீஸ்பூன் மஞ்சள் மற்றும் அரை டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் தடவி வர சருமம் மென்மையாக இருப்பதை உணர முடியும். அதேநேரத்தில் முகப்பருக்கள் தொல்லையில் இருந்தும் உடனடியாக விடுபடலாம். 

பலருக்கும் உதடு அடிக்கடி வறண்டு போகும். இதனால் வெடிப்புகள் ஏற்பட்டு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் உதடுகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் பயன்படுத்த வேண்டியதெல்லாம் மஞ்சள்தான். அதனை Vaseline போன்ற பெட்ரோலியம் ஜெல்லியுடன் கலந்து கொள்ளுங்கள். இதனை உதட்டில் தடவி சிறிது நேரத்திற்கு பிறகு துடைத்துக் கொள்ளவும். அதன்பிறகு moisturizer போட்டுக் கொள்ளவும். இதனை தினமும் செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


தக்காளி சாறு மற்றும் மஞ்சள் தூளை கலந்து அதனை முகத்தில் தடவலாம். இதனால் முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் கிருமிகளை அகற்ற முடியும். வெயிலில் அதிக நேரம் சுற்றித் திரிந்தால் முகத்தில் அதிகப்படியான தூசுகள் படிந்திருக்கும். அதனை நீக்குவதற்கு இந்த முறையை நீங்கள் முயற்சித்து பார்க்கலாம்

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags