முன்னாள் முதல்வர் காமராஜர் பெயரில், பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட சிறந்த பள்ளி விருதுக்கான ஆய்வுப்பணிகளை, கல்வித்துறை துவங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ம் தேதி, கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இவரது நினைவாக, மாவட்ட வாரியாக தலா ஒரு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு, சிறந்தபள்ளி விருது வழங்குவதோடு, ஒரு லட்சம் ரூபாய் வரை ரொக்கப்பரிசும் அளிக்கப்படுகிறது. இத்தொகையை கொண்டு பள்ளியின் கட்டமைப்பு வசதியை, மேம்படுத்திக் கொள்ளலாம்.
வழக்கமாக ஜூலை துவக்கத்தில், இவ்விருதுக்கான பணிகள் துவங்கும். தகுதியுள்ள பள்ளிகளின் பட்டியல், இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.ஊரடங்கு காரணமாக நடப்பாண்டில், சிறந்த பள்ளிக்கான விருதுக்கு ஆய்வு துவங்குவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், '
ஊரடங்கு காரணமாக நிர்வாக செயல்பாடுகள் தாமதமாக நடப்பது உண்மை தான். ஆனால், இவ்விருதுக்கு கடந்தாண்டு செயல்பாடுகள் தான் மதிப்பிடப்படுகின்றன. பள்ளிகளை ஆய்வு செய்து, அறிக்கை புத்தகத்தில் செயல்பாடுகளை பார்வையிட்டும், சிறந்த பள்ளிகளை தேர்வு செய்யலாம். கற்பித்தல் பணிகள் துவங்கிய பின்பு, விருதுக்கான ஆய்வுப்பணிகள் முழுவீச்சில் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம். எனவே, சிறந்த பள்ளி விருதுக்கு இப்போது அறிவிப்பு வெளியிடலாம்' என்றனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.