ஆசிரியர்கள் எடுத்த முயற்சியால் புதுபொலிவு பெற்ற அரசு பள்ளி
திருமங்கலத்தில் பெற்றோர் ஒத்துழைப்புடன் ஆசிரியர்கள் எடுத்த முயற்சியால் ரூ.15 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டு புதுபொலிவு பெற்றது அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி.
பள்ளியில் 1800 மாணவியர் படிக்கின்றனர். ஊரடங்கால் விடுமுறை விடப்பட்டதை பயன்படுத்தி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் முடிவு செய்தனர். பெற்றோர் ஆசிரியர்கள் கழகத்தினர், ஆசிரியர்கள், அலுவலர்கள் முடிந்தளவு நன்கொடை வழங்கினர்.
ரூ.15 லட்சத்தில் 61 வகுப்பறைகள், 6 ஆய்வகங்கள், 2 அலுவலக கட்டடங்களில் மராமத்து மற்றும் பெயின்டிங் பணி, 8 கழிப்பறைகள், 30 சிறுநீர்கழிப்பிடங்கள் மராமத்து, புதிதாக 2 ஆயிரம் சதுர அடியில் கழிப்பறை கட்டுமான பணி நடந்துள்ளன. 20 குடிநீர் குழாய்கள், மழை நீர் சேகரிப்பு, 5000 லிட்டர் கொள்ளளவு தொட்டி அமைக்கப்பட்டுள்ளன.
மீனாட்சி அம்மன் கோயில் சங்கரநாராயண பட்டர் தலைமையில் பள்ளியில் நடந்த யாக பூஜையில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயராமன், தலைமை ஆசிரியர் ராஜபூபதி, ஆசிரியர்கள் கர்ணன், நவமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.