1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பலாப்பழ மாவு!

 சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பலாப்பழ மாவு!


உடலில் உள்ள சக்கரையின் அளவை குறைப்பதற்கும் நீரிழிவு  நோயை கட்டுப்படுத்துவதற்கும் பலாப்பழ மாவு உதவுவது  மருத்துவ ரீதியாக நிருபணம் செய்யப்பட்டுள்ளது. 


உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அன்றாட வாழ்வில்  அதிகம் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நோய்களில் ஒன்றாக  நீரிழிவு நோயும் இருந்து வருகிறது. சர்வதேச நாடுகளை  காட்டிலும் இந்த நோய் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாக சிறியவர்களும் இந்த நோய் பாதிப்புக்கு  ஆளாகிவருகினர். இந்த நோயை முழுமையாக குணப்படுத்த  இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும்  இன்சுலின் மூலமாக ரத்தத்தில் சக்கரையின் அளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில் நாம் உண்ணும் அன்றாட உணவிலேயே உடலின்  சக்கரையின் அளவை குறைக்கவும் நீரிழிவு நோயை  கட்டுப்படுத்தவும் பலாப்பழ மாவு உதவிகரமாக இருப்பது  மருத்துவ ஆய்வில் நிருபணம் ஆகியுள்ளது.


இதற்காக 40 தன்னார்வலர்களில் 20 பேருக்கு தினம் தோறும்  இட்லி அல்லது ரொட்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் அரிசி  மற்றும் கோதுமை மாவில் 30 கிராம் பச்சை பலாப்பழ மாவை  கலந்து இட்லி, சப்பாத்தி சமைத்து வழங்கப்பட்டது. சுமார் மூன்று  மாதங்கள் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தன்னார்வலர்களின்  பிளாஸ்மா குளுகோஸின் அளவு கட்டுப்படுத்தப்படுவதை  கண்டறிந்துள்ளனர். 


இது குறித்து தெரிவித்துள்ள வினு நாயர் என்ற 51 வயது நீரிழிவு  நோயாளி, நான் ஆரம்பத்தில் எனது மருந்துகளுடன் மாவு  உட்கொள்ளத் தொடங்கினேன், நல்ல முன்னேற்றம் தென்பட்டது.  நான் மருந்துகளை நிறுத்தி இப்போது நான்கு மாதங்கள் ஆகிவிட்டன, நான் மாவுடன் மட்டுமே இப்போது உட்கொண்டு  வருகிறேன் என தெரிவித்தார். 


தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஒப்புதலை  பெற்றுள்ள இந்த பலாப்பழ மாவை ஜாக்ஃப்ரூட் 365 என்ற  பலாப்பழம் விற்கும் நிறுவனத்தின் உரிமையாளர் ஜேம்ஸ்  ஜோசப்பால் கண்டுபிடிக்கப்பட்டது.

 

சாதாராணமாக உலர்ந்த பலாப்பழங்களை விற்றுவந்த இவர்  எவ்வாறு பலாப்பழ மாவை விற்க முன்வந்தார் என்பது குறித்து  பகிர்ந்து கொண்டார்.

 

2014 ஆம் ஆண்டு பச்சை பலாப்பழமாவு தயாரிக்கும் யோசனை  தோன்றியது. அப்போது நீரிழிவு நோயாளி ஒருவரை சந்தித்தேன்  அவர் இன்சுலினை குறைத்துக்கொண்டு பைபர் உணவுகளை  அதிகமாக எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார். இந்த  யோசனையே பலாப்பழத்தை மக்களின் உணவில் சேர்த்துக்கொள்ள உதவியதாக தெரிவித்தார். 


மேலும் தான் எழுதிய God Own Office என்ற புத்தகத்தை  படித்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் தன்னை  டெல்லிக்கு அழைத்து தனது கண்டுபிடிப்பு தொடர்பாக  பாராட்டினார். மக்களின் உணவுப்பழக்கத்தை மாற்றாமல் அவர்களின் உணவில் பலாப்பழத்தை சேர்க்க ஒரு வழியை  கண்டுபிடிக்கச் சொன்னார். அதை கண்டிபிடித்தால் அதை தானே  சந்தைப்படுத்த உதவுவதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால்  துருதிஷ்டவசமாக அவர் மறைந்து விட்டார். இருப்பினும் அவரது  வார்த்தை தன்னை ஊக்குவித்தது. இதனால் சுமார் 5 ஆண்டுகள் கடும் முயற்சிக்குப் பிறகு இந்த பலாப்பழ மாவு உருவாகியுள்ளது  என தெரிவித்தார். தற்போது மாவு மட்டுமே பலாப்பழத்தில்  இருந்து தயாரிக்கப்படுவதாகவும் இந்த பலாப்பழங்கள் தமிழ்நாடு  மற்றும் கேரள விவசாயிகளிடம் இருந்து பெறப்படுவதாகவும்  தெரிவித்தார். 


இந்த பலாப்பழ மாவை அரிசி மாவில் கலந்து இட்லியாக  வேகவைத்து உண்ணலாம். அதேபோல் கோதுமை மாவில்  கலந்து சப்பாத்தியாக சமைத்தும் உண்ணலாம். இந்த பலாப்பழ  மாவு அமேசான் பிக்பாஸ்கெட் உள்ளிட்ட இ- காமர்ஸ் தளங்கள்  மூலம் கேரளா தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் 5000  கடைகளில் கிடைக்கிறது. தினசரி உணவு தயாரிக்கும்போது இந்த  மாவை 30 கிராம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags