அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 'ஆன்லைனில்' பயிற்சி துவக்கம்
உடுமலை கல்வி மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர்களுக்கு, டெலிகிராம் செயலி மூலம் 'ஆன்லைன்' பயிற்சி துவங்கியுள்ளது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, கல்வித்துறையில் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்துவது குறித்து, 'நிஷ்தா' (தேசிய அளவில் கல்வி முழு மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு) எனப்படும் பயிற்சியை கடந்தாண்டு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டது.
பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டது, க்யூ ஆர் கோடு பயன்பாடு, புதிய பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டதற்கான கையேடுகள், நிஷ்தா செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆசிரியர்கள் இதனை தொடர்ந்து பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.நடப்பு கல்வியாண்டில், நிஷ்தா அடுத்தகட்ட பயிற்சி குறித்து, கல்வி மாவட்ட ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். பயிற்சியில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
வட்டார அளவில், டெலிகிராம் செயலி மூலம், ஆசிரியர்களை இணைத்து, குரூப் உருவாக்கப்பட வேண்டும். தொடர்ந்து, தீக்சா செயலியையும் ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள், பயிற்சி அளிக்கின்றனர். ஆசிரியர் பயிற்றுனர்கள், பயிற்சிகளை வீடியோக்களாக, செயலியில் பதிவேற்றம் செய்ய திட்டமிட்டுள்ளனர். உடுமலை கல்வி மாவட்டத்தில், பயிற்சிக்கான குழுக்களை செயலியில் ஆசிரியர்கள் அமைத்துள்ளனர்.

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.