கார்போஹைட்ரேட் நிறைந்த உணவு (Carbohydrates food)
கார்போஹைட்ரேட்டுகளின் ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற ஆதாரங்கள் பின்வருமாறு. அவை நமது தினசரி ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்ய சரியான அளவை தேர்வு செய்ய உதவும் ஒரு வழிகாட்டியாக செயல்படும். உடல் உழைப்பினை பொறுத்து, ஒவ்வொரு நாளும் 225 அல்லது 325 கிராம் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்களை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறீர்கள். உங்களுடைய சிறந்த அளாவிலான கார்போஹைட்ரேட் தேவைகளைப் பூர்த்தி செய்ய உங்கள் மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி வல்லுநரைப் அணுகிஆலோசனை பெற பரிந்துரைக்கப்படுகிறீர்கள்.
கார்போஹைட்ரேட்டின் ஆரோக்கியமான ஆதாரங்கள்
ஆப்பிள், மாம்பழம், வாழை, தர்பூசணி, பெர்ரி, பீச், மெலங்கள் (பிரக்டோஸ் கொண்டவை) போன்ற பழங்கள்
பழ சாறுகள்
உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ப்ரோக்கோலி, செலரி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ், குடை மிளகாய், சீமை சுரைக்காய் (ஸுக்கினி), முள்ளங்கி, காளான் போன்ற காய்கறிகள்
ஓட்ஸ், மியூஸ்லி, கினோவா, பழுப்பு நிற அரிசி, பாப்கார்ன் (குறைந்த உப்பு மற்றும் வெண்ணெய் கொண்டது), தானியங்கள் போன்ற முழு தானியங்கள்
பீன்ஸ், பட்டாணி, பருப்பு போன்ற பருப்பு வகைகள்
முளை கட்டிய தானியங்கள்
முழு கோதுமை ரொட்டி, பிஸ்கட் மற்றும் பிற பொருட்கள்
முழு கோதுமையில் இருந்து, பல மாவுகள் கலந்த மாவு அல்லது பார்லி, சிறு தானியங்கள் போன்ற இதர மாவுகளிலிருந்து செய்யபட்ட சப்பாத்தி அல்லது ரொட்டி , மேலும் சில
பால் (லாக்டோஸ் உள்ளது), சீஸ், தயிர், தஹி போன்ற பால் பொருட்கள்
மெலிந்த இறைச்சிகள் மற்றும் கோழி
கருப்பு பீன்ஸ், ராஜ்மா பீன்ஸ், உடைத்த பீன்ஸ்
முழு கோதுமை பாஸ்தா அல்லது சான்விச்
முழு தானியங்களிலும் உணவுத் திசுக்கள் உள்ளன
கொட்டைகள் மற்றும் விதைகள்
கார்போஹைட்ரேட்டின் ஆரோக்கியம் இல்லா ஆதாரங்கள்
ஆரோக்கியமற்ற கார்போஹைட்ரேட்டுகள் அனைத்து குப்பை (ஜங்க் ஃபூட்) உணவுகளிலும், துரித உணவுகள் மற்றும் சர்க்கரைப் பொருட்களிலும் நிறைந்து காணப்படுகிறது. அத்தகைய உணவுகள் பின்வருமாறு:
பர்கர்
பீட்சா
சிக்கன் நக்கெட்
ஒரு பாக்கெட் வறுத்த உணவுகள் அல்லது சிப்ஸ்கள்
நூடுல்ஸ்
வெள்ளை பாஸ்தா
வெள்ளை ரொட்டி மற்றும் வெள்ளை ரொட்டி பொருட்கள்
வெள்ளை நிற அரிசி
சுத்திகரிக்கப்பட்ட மாவு (மைதா)
பேக்கரி பொருட்கள்
ஹாட் டாக்ஸ்
டோனட்ஸ், முஃப்பின்ஸ், கேக்குகள், பாஸ்ட்றீஸ், மேக்ரோன்கள், இனிப்பு பைஸ், வெள்ளை சாக்லேட் போன்ற இனிப்புகள்
பிஸ்கட்ஸ்
சீரீயல்ஸ் போன்ற பாக்கெட் செய்யப்பட்ட உணவுகள்
சிவப்பு நிற இறைச்சிகள்
சர்க்கரை கொண்ட எல்லா உணவு பொருட்கள்
நீங்கள் எப்போதாவது ஆரோக்கியமற்ற இந்த வகை உணவுகளை விருப்பபட்டால் சாப்பிடலாம். ஆனால் அதையே அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இவ்வகை உணவுகளை நீண்ட காலத்திற்கு சாப்பிட்டு வருவதால் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சைகள் ஏற்பட கூடும். நீங்கள் ஆரோக்கியம் நிறைந்த கார்போஹைட்ரேட் உணவு பட்டியலில் இருந்து உணவுகளை தேர்வு செய்ய பரிந்துரைக்கப்படுகிறீர்கள் மற்றும் முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற சிக்கலான ஆதாரங்களைத் தேர்ந்தெடுப்பது பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் அவற்றில் உள்ள ஊட்டச்சத்து கலவைகள் உடல் நலனுக்கு மிகவும் நல்லது ஆகும். சர்க்கரை போன்ற எளிமையான கார்போஹைட்ரேட்டுகள் வெற்று கலோரிகளை வழங்குகின்றன மேலும் அவை எந்த வித ஊட்டச்சத்து நன்மைகளையும் வழங்குவது இல்லை.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.