வங்கியில் கடன் பெற்ற பயனாளிகளுக்கு 2020 மார்ச் 1 முதல் 2020 ஆகஸ்ட் 30 வரை வட்டிக்கு வட்டி வசூலிக்கும் கூட்டு வட்டி தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடன் தவணையை செலுத்த சலுகை அறிவிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்கும், வட்டிக்கு வட்டி வசூலிக்கும் முறையை தள்ளுபடி செய்யக் கோரிய வழக்கில், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டபடி, கூட்டு வட்டி தள்ளுபடி செய்யப்படுவது தொடர்பான அறிவிப்பை இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ரூ.2 கோடி வரை கடன் பெற்றவா்கள் பயன்பெறுவார்கள்
ஸ்டேட் வங்கி உள்ளிட்ட அனைத்து தேசிய வங்ககளில் கடன் பெற்றவர்களுக்கும் கடன் மீதான வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.
சிறு, குறு, தொழில் கடன், கல்விக் கடன், வீட்டுக் கடன், தனிநபர் கடன், கிரெடிட் அட்டை கடன், வாகனக் கடன் பெற்ற பயனாளர்களுக்கு இந்த ஆறு மாதங்களுக்கும் கடன் தவணையில் வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.
அதேவேளையில், கடன் தவணையை செலுத்த சலுகை வழங்கப்பட்ட தள்ளி வைப்பு காலத்தில் முறையாக கடன் தவணை செலுத்தியவர்களுக்கு, அவர்கள் செலுத்திய வட்டிக்கு வட்டித் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு (கேஷ்பேக்) வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் மாத தவணை செலுத்துவதில் விலக்கு பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதித்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து வட்டிக்கு வட்டியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.