மிளகின் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் (Black pepper health benefits)
ஆரோக்கியத்துக்கு: மிளகு மிகச் சிறந்த ஒரு நோய் எதிர்ப்பு தூண்டி, மற்றும் தாது சார்ந்த நோய் எதிர்ப்பு, மற்றும் செல்களால் உருவாக்கப்படும் நோய் எதிர்ப்பு இரண்டுக்கும் உதவுகிறது. மேலும் அது, நோய்த்தொற்றுக்கள் மற்றும் நோய் ஏற்படாமல் தடுக்க உதவுகின்ற வகையில், பல நோய்த்தொற்று நுண்ணுயிர்களுக்கு எதிராக நுண்ணுயிர் எதிர்ப்பு விளைவுகளையும் கொண்டிருக்கிறது. அது ஒரு இயற்கையான் உயிர்வளியேற்றப் பொருளாக செயல்படுவதன் மூலம், பல்வேறு நீடித்த வியாதிகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் செய்கிறது.
செரிமானத்துக்கு: மிளகு, உணவு பயணிக்கும் நேரத்தைக் குறைப்பது, மற்றும் வயிற்றில் செரிமான அமிலங்கள் சுரப்பதை ஊக்குவிப்பது ஆகியவற்றில் உதவுவதனால், உணவை நன்கு செரிமானம் செய்ய உதவியாக இருக்கிறது.
கொழுப்பு அளவுகளுக்கு: மிளகு எடுத்துக் கொள்வது, உடலில் உள்ள கொழுப்புக்களின் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது. அதனால் அது HDL கொழுப்புக்களை (அல்லது நல்ல கொழுப்புக்களை) அதிகரிக்க உதவுகின்ற அதே வேளையில், LDL (அல்லது கெட்ட கொழுப்பு) -ஐக் குறைக்கவும் உதவுகிறது.
காய்ச்சலைக் குறைப்பதற்கு: மிளகு காய்ச்சல் தணிப்பு, மற்றும் வலி நிவாரண செயல்பாடுகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் அது, மலேரியா காய்ச்சல் நீடிக்கும் கால அளவினைக் குறைப்பதாகவும் கூறப்படுகிறது.
மூட்டழற்சிக்கு: மிளகு ஒரு அழற்சி எதிர்ப்பு காரணி ஆகும், அது பாதிக்கப்பட்ட மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் ஏற்படுவதைக் குறைக்கின்ற அதே வேளையில், அவற்றில் உள்ள எலும்பு திசுக்களில் ஏற்படும் சிதைவைத் தடுக்கவும் செய்கிறது.
புற்றுநோய் தடுப்புக்கு: மிளகுகள், புற்றுநோய் தன்மை உள்ள செல்களின் வளர்ச்சியால் தோன்றுகின்ற அழற்சி சார்பு சைடோகைன்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதால் அது, புற்றுநோய் தடுப்பில் ஒரு பங்கினைக் கொண்டிருக்கக் கூடும்.
மிளகின் பக்க விளைவுகள் (Black pepper side effects)
இரைப்பை சார்ந்த பிரச்சினைகள்
மிளகை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது, வயிறு அசௌகரியத்துக்கு வழிவகுக்கக் கூடும். ஒரு ஆய்வில், கருப்பு மற்றும் சிவப்பு மிளகினை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் ஆராயப்பட்டன. அதில், அது பேரியாட்டல் சுரப்பு, பெப்சின் சுரப்பு ஆகியவற்றில் ஒரு கணிசமான அதிகரிப்பு மற்றும் பொட்டாசியம் இழப்புக்குக் காரணமாகிறது என்று கண்டறியப்பட்டது. இவை பல்வேறு இரைப்பை சார்ந்த பிரச்சினைகளுக்கு காரணமாகிறது. நீங்கள் ஒரு அதிகபட்ச உணர்திறன் வயிற்றைக் கொண்டிருக்கும் பட்சத்தில், மிளகிடம் இருந்து விலகி இருப்பது அறிவுறுத்தப்படுகிறது.
ஒவ்வாமை எதிர்விளைவுகள்
மிளகினை அதிகமாக எடுத்துக் கொள்வது, கர்ப்பிணிப் பெண்களுக்கு உயர் உணர்திறன், அல்லது ஒவ்வாமை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டு இருக்கிறது. நீங்கள் மிகவும் உணர்திறன் கொண்ட ஒரு நபர் என்றால், உங்கள் உடல்நிலைக்கு ஏற்றவாறு மிளகினைத் தவிர்ப்பது மிகவும் பயனுள்ள தேர்வாகும்.
சுவாசம் சார்ந்த பிரச்சினைகள்
மிளகை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது, சுவாச மண்டலம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கிறது. மிளகுகள் மூச்சு விடுதல் பிரச்சினைகளோடு தொடர்புடையவையாக இருக்கின்றன, மற்றும் அதிகபடியான பயன்பாடு, பெரும்பாலான நேரங்களில் தொண்டையில் தொந்தரவு, ஆஸ்துமா மற்றும் பிற வகை சுவாசம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கக் கூடியது ஆகும். 17 மாத வயதுள்ள ஒரு பையனின் மருத்துவ பரிசோதனையில், கருப்பு மற்றும் சிவப்பு மிளகு உள்ள ஒரு உணவினை சாப்பிட்ட உடனே, அவனுக்கு அரிப்புத்தடிப்பு, விழி வெண்படல அழற்சி, முக வீக்கம், மற்றும் கடுமையான இருமல் ஏற்பட்டிருப்பது கண்டறிப்பட்டது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.