பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் ஆயுஷ் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த ஆண்டுக்கான தேர்வு, செப்., 12ல் நாடு முழுதும் நடத்தப்பட்டது. இந்நிலையில், நீட் தேர்வுக்கான வினாத்தாளின் அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பும், மாணவர்களின் விடைத்தாளும், ஒவ்வொரு மாணவருக்கும் சமீபத்தில் வழங்கப்பட்டன.இதை பார்த்து, மாணவர்கள் தங்களுக்கான உத்தேச மதிப்பெண்ணை அறிந்தனர். ஏதாவது, சில விடைக்குறிப்புகளில் மாறுதல் இருந்தால் மட்டும், இறுதி முடிவில், மதிப்பெண்ணில் சில மாறுதல் ஏற்படும்.
இந்நிலையில், தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண், 'கட் ஆப்' விபரங்கள், இன்று அல்லது நாளைக்குள் வெளியிடப்படலாம் என, எதிர்பார்க்கப் படுகிறது. முடிவுகளை, www.nta.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.