நீட் தேர்வு ரிசல்ட்: தமிழக அரசு பள்ளி மாணவர் முதலிடம்
நீட் தேர்வில் இந்திய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் தமிழக மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்

இது குறித்து கூறப்படுவதாவது: கடந்த மாதம் 13ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது அதற்கான ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது. இதில் இந்திய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஜீவித்குமார் 720க்கு 664 மார்க்குகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். நீட் தேர்வில் அகில இந்திய அளவில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 57.44 ஆக உள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 48.57 ஆக இருந்தது.,

இவர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்துள்ளார். இவரது தந்த நாராயணசாமி ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார், ஆசிரியர்கள் மூலம் திரட்டபபட்ட நிதியின் மூலம் கடந்த ஓராண்டாக நீட் தேர்விற்கு தயாராகி வந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர் ஸ்ரீஜன் 720 -க்கு 710 மார்க்குகள் எடுத்து மாநில அளவில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் எட்டாம் இடத்தை பிடித்துள்ளார். மேலும் அகில இந்திய அளவில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மாணவர் சோயப் அப்தாப் 99.99 மார்க்குகள் எடுத்து முதலிடத்தை பிடித்துளளார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.