வாழைத்தண்டில் நார்ச்சத்து அளவுக்கு அதிகமாக இருப்பதால், எடையைக் குறைக்க நினைப்போர் வாழைத்தண்டு ஜூஸை காலையில் தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, உடல் எடையையும் விரைவில் குறையும்.
வாழைத்தண்டு ஜூஸில் உப்பு சேர்க்காமல் குடித்து வந்தால், சிறுநீரக கல் உருவாவது தடுக்கப்படுவதோடு, கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையும் குறையும்.
வாழைத்தண்டு ஜூஸ் செய்முறை: மிக்ஸியில் வாழைத்தண்டை போட்டு, மிளகு, வறுத்த சீரகம் மற்றும் தயிர் சேர்த்து நன்கு அரைத்து, பின் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி வடிகட்டினால், வாழைத்தண்டு ஜூஸ் தயார்.
சிறுநீரக கற்கள் வராமல் இருக்கவும், இருக்கும் சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.
இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரக்க நேர்ந்தால், நெஞ்செரிச்சல் ஏற்படும். இதனை சரிசெய்ய வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்
மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். அதிலும் வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால், மலச்சிக்கல் உடனே குணமாகும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.