1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

நாம் கோபப்படுவதேன் (angry) அறிவியல்-விளக்கம்

 

நாம் கோபப்படுவதேன் (angry)💐

🏵பதில்🏵

👉நம் எதிர்பார்ப்புகள் பூர்த்தியடையாத போது கோபமடைகிறோம்.

👉கோபமானது பொறுமையை இழப்பது,அச்சுறுத்தப்படுதல் (threatened) அல்லது தாக்கப்படுதல், விரக்தியடைதல் (frustrated),நியாயமற்ற முறையில் நடத்தப்படுதல் (treated unfairly),நம் உணர்வுகள் அல்லது உடைமைகளை பிறர் மதிக்காமலிருத்தல் போன்ற பொதுவான சூழ்நிலைகளால் கோபத்தை பெறுகிறோம்.

🏵விளக்கம்🏵

👉கோபம் என்பது தீவிர உணர்ச்சி நிலையைக் (intense emotional state) குறிக்கிறது.

👉இது ஆத்திரமூட்டல், காயம் அல்லது அச்சுறுத்தலுக்கான தூண்டலுக்கு விரும்பத்தகாத மற்றும் பகைமையை வெளிப்படுத்தும் உணர்ச்சி நிலையாகும்.

👉நாம் கோபப்படும் போது இதயத்துடிப்பு (Heart rate),இரத்த அழுத்தம் (Blood pressure) மற்றும் டெஸ்டோஸ்டிரோன் (testosterone) உற்பத்தி ஆகியவை அதிகரிக்கிறது. கார்டிசோல் என்ற மன அழுத்த  ஹார்மோன்(cortisol hormone)குறைவதால் அதனை சமநிலைப்படுத்த அட்ரீனலின் ஹார்மோன் (adrenaline) அதிகமாக சுரந்து கோபத்தின் போது சண்டையிடத் (fight) தூண்டுகிறது.

🏵கோபத்தை கட்டுப்படுத்தும் வழிகள்🏵

👉1 முதல் 10 வரை எண்களை எண்ணுதல்-இதயத்துடிப்பை குறைத்து கோபத்தை படிப்படியாக  குறைக்கிறது.

👉சிறிது நடத்தல் அல்லது பைக் சவாரி செய்தல்-இது நரம்புகளை அமைதிபடுத்தி கோபத்தைக் குறைக்கிறது.

👉 இசைகளை கேட்டல்/பாடுதல்-கோப உணர்விலிருந்து இசை மாற்றுகிறது.

👉கோபப்படும் இடத்திலிருந்து வெளியேறுதல்- சிந்தனையை வேறு நிகழ்வில் செலுத்தி கோபத்தைக் குறைத்தல்.

👉உற்ற நண்பரிடம் பேசுதல்- நம்பிக்கைகுரிய ,ஆதரவு தரும் நண்பரிடம் பேசுவதால் கோப உணர்வு குறைகிறது.

👉சிரித்தல் -சிரிப்பதற்கான வழிகளை தேடுவதன் மூலம் கோபத்தை குறைத்தல்


Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags