Home »
General
» அமேசான் செயலியில் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி
|
|
|
| அமேசான் பிரைம் உறுப்பினர்கள் முதன்முறையாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் 120 ரூபாய் கேஷ்பேக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
| அமேசான் இந்தியா, இந்திய ரயில்வே (ஐ.ஆர்.சி.டி.சி)யுடன் கூட்டு சேர்ந்து பயணிகளுக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இப்போதைய முன்பதிவு அம்சம் அமேசானில் மொபைல் வலைத்தளத்திலும், ஆண்ட்ராய்டு பயன்பாட்டிலும் பெறலாம். ஒரு கிளிக் கட்டணம், கூடுதல் சேவை கட்டணங்கள் இல்லை மற்றும் கேஷ்பேக் சலுகைகள் உள்ளிட்ட பல முன்பதிவு சலுகைகளையும் அமேசான் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.
|
| ஐஆர்சிடிசி-யில் வழங்கப்படும் சேவைகளை போன்றே பயண வகை தேர்ந்தெடுப்பு, விரும்பிய இடம் தேர்ந்தெடுப்பு, இருக்கை தேர்ந்தெடுப்பு, பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் தேடுதல், கட்டண தேர்வு, ரத்து செய்தல் போன்ற வசதிகளையும் அமேசானில் செய்யலாம். வாடிக்கையாளர்கள் முதன்முதலாக செய்யும் டிக்கெட் முன்பதிவில் 10 சதவீதம் கேஷ்பேக் (ரூ .100 வரை) கிடைக்கும், அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் தங்கள் முதல் முன்பதிவுக்காக 12 சதவீத கேஷ்பேக் (ரூ. 120 வரை) பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது |
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.