1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

உடலில் உள்ள புழுக்கள் இயற்கையான முறையில் வெளியேற செய்ய வேண்டிய வழி முறைகள்.

உடலில் உள்ள புழுக்கள் இயற்கையான முறையில் வெளியேற செய்ய வேண்டிய வழி முறைகள்.




உங்கள் உடலில் உள்ள புழுக்களை இயற்கையாக வெளியேற்ற விரும்பினால் இதனை தினமும் செய்து வாருங்கள்.

மனித உடலில் ஏராளமான ஒற்றுமைகள் இருக்கின்றன. அதில் உருளைப் புழுக்கள், நாடாப்புழுக்கள், ஊசி புழுக்கள் மற்றும் கொக்கிப் புழுக்கள் போன்றவை மனிதனின் குடலில் வாழும் ஒட்டுண்ணி புழுக்கள் ஆகும். அவை அனைத்தும் ஒவ்வொரு வடிவத்தில் இருக்கும். இதனை அடிக்கடி உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும். இல்லை என்றால் அவை நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடும். இப்படிப்பட்ட கொடிய தன்மை கொண்ட குழுக்களை இயற்கையாக எப்படி அழிப்பது என்று பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

வெதுவெதுப்பான பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் அரைத்த பப்பாளி விழுது மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, ஒரு வாரம் காலையில் எழுந்ததும் தொடர்ந்து குடிக்க வேண்டும்.


ஒரு டம்ளர் மோரில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள புழுக்கள் வெளியேறும். ஒரு டேபிள்ஸ்பூன் வறுத்த பூசணி விதையில் அரை கப் நீர் மற்றும் தேங்காய் பால் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இப்படி ஒரு வாரம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். சிறிது வேப்பிலையை அரைத்து விழுது போன்று செய்து, ஒரு டம்ளர் நீரில் அரை ஸ்பூன் வேப்பிலை விழுதை சேர்த்து காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடித்து வர புழுக்கள் தானாக வெளியேறும். மேலும் பூண்டு பல்லை வாயில் போட்டு மெல்லலாம் அல்லது பூண்டு டீ தயாரித்து வெறும் வயிற்றில் ஒரு வாரத்திற்கு குடித்து வரலாம்.

காலை உணவில் ஒரு டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காயை சாப்பிடுங்கள். அதன் பிறகு மூன்று மணி நேரம் கழித்து 2 டீஸ்பூன் விளக்கெண்ணெய் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் கலந்து குடிக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் உள்ள புழுக்கள் வெளியேறும். 2 அல்லது 3 கிராம்புகளை ஒரு டம்ளர் நீரில் போட்டு 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து, அதன் பிறகு வடிகட்டி தினமும் இரண்டு அல்லது மூன்று முறை என ஒரு வாரம் குடித்து வர வேண்டும். மிகவும் எளிதாக வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க விரும்பினால் ஒரு வாரத்திற்கு தினமும் கேரட்டை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags