இந்த தண்ணீரை மட்டும் குடிங்க….” உங்கள் எடை குறைந்து ஸ்லிம் ஆயிடுவீங்க”… எப்படி செய்வது..? வாங்க பார்க்கலாம்..!!
உடல் எடையை குறைக்க இந்த தண்ணீரை நீங்கள் தினசரி சாப்பிட்டு வந்தாலே போதும் விரைவில் எடையை குறைக்க முடியும்.
உடல் எடை என்பது தற்போது பெரும் பிரச்சனையாக மாறி வருகின்றது. இந்த உடல் எடையின் காரணமாக பலர் அவதிப்படுகிறார்கள். உடல் எடையால் பக்கவிளைவுகளும் நமக்கு வரும். உடல் எடையை குறைப்பதற்கு முறையான சிகிச்சைகளையும், டயட் களையும் பின்பற்ற வேண்டும். ஆனால் பலர் மிகவும் அதிக அளவில் டயட் என்ற பெயரில் உணவே உண்ணாமல் இருப்பதால் பல பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். ஆகவே இயற்கையான முறையில் உணவுகள் மூலம் உடல் எடையை குறைப்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
அந்த வகையில் தற்போது டிடாக்ஸ் தண்ணீர் மிகவும் பிரபலமாகி வருகிறது. இயற்கை முறையில் தயாரிக்கப்படும் இந்த நீரை பருகுவது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை வெளியேற்றும் என்கின்றனர். இது எப்படி தயாரிப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். சுத்தமான ஒரு லிட்டர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஒரு எலுமிச்சையை வட்டமாக வெட்டி போட வேண்டும். பிறகு புதினா இலைகள் ஒரு கை அளவுக்கு போட வேண்டும். ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சிறிதாக வெட்டி தண்ணீரில் போட வேண்டும்.
அதை தட்டு போட்டு மூடி விட்டு 4 முதல் 5 மணி நேரம் கழித்து அதை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கலாம். தொடர்ந்து இதனை குடித்து வருவதன் மூலம் உடல் எடை குறையும். உடலில் உள்ள பித்தத்தை குறைக்கும். தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன் நாள் முழுவதும் உங்களை புத்துணர்வுடன் வைத்திருக்கும்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.