1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

கோழி முட்டைக்கு பதில் வாத்து முட்டை சாப்பிடுவது எவ்வளவு நல்லது?...


கோழி முட்டைக்கு பதில் வாத்து முட்டை சாப்பிடுவது எவ்வளவு நல்லது?... என்னென்ன அற்புத விஷயங்கள் உடலில் நடக்கும்...




முட்டை ஒரு ஆரோக்கியமான உணவு என்பது எல்லாருக்கும் தெரியும். முட்டையில் இல்லாத ஊட்டச்சத்துக்களே இல்லை எனலாம். உலகளவில் கோழி முட்டைகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் சமீபத்திய ஆண்டுகளில் வாத்து முட்டைகள் அதிகப் புகழ்பெற்று உள்ளது. இதனால் மக்கள் வாத்து முட்டைகளை வாங்க தொடங்கி உள்ளனர். கோழி மற்றும் வாத்து முட்டைகள் கிட்டத்தட்ட எல்லா விதத்திலும் ஒன்று போல் தான் இருக்கும். ஒரு வாத்து முட்டையை சாப்பிடுவது 11/2 கோழி முட்டை அல்லது 2 கோழி முட்டையை சாப்பிடுவதற்கு சமமாகும். இந்த வாத்து முட்டையை எடுப்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி அறிந்து கொள்வோம்.

​வாத்து முட்டைகள் அளவில் பெரியது

வாத்து முட்டைக்கும் கோழி முட்டைக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு வாத்து முட்டைகள் கோழி முட்டைகளை விட 50% அளவு பெரிதானது. அதே மாதிரி வாத்து முட்டைகளின் நிறமும் கோழி முட்டைகளில் இருந்து வித்தியாசப்படுகிறது. வாத்து முட்டைகள் மஞ்சள், பச்சை, வெளிர் சாம்பல், நீலம் மற்றும் கருப்பு வண்ணங்களில் இருக்கும்.

​சுவை க்ரீமி தன்மை போன்றது

வாத்து முட்டைகளில் காணப்படும் புரதங்களின் பன்முகத்தன்மை வாத்து முட்டைகளை நுரைத்தல், கூழ்மமாக்கும் பண்புகளுக்கு காரணமாகின்றன. ஓவல்புமின் என்பது வாத்து முட்டைகளில் உள்ள ஒரு புரதம் இது உணவு சேர்க்கைகளில் அதிக தடுப்பு நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது. இவை தான் வாத்து முட்டைக்கு க்ரீமி தன்மையை கொடுக்கிறது.

​வாத்து முட்டைகளில் காணப்படும் புரதங்கள்

வாத்து முட்டைகளில் கிட்டத்தட்ட அல்புமின் அடங்கிய 5 வகையான புரதங்கள் காணப்படுகிறது. ஓவல்புமின் (40%), ஓவொமுகோயிட் (10%), ஓவோட்ரான்ஸ்ஃபெரின் (2%), ஓவோமுசின் (3%) மற்றும் லைசோசைம் (1.2%) போன்ற புரதங்கள் உள்ளன. கோழி முட்டைகளுடன் ஒப்பிடும் போது வாத்து முட்டைகள் அதிக புரத செறிவை கொண்டுள்ளது. எனவே தான் வாத்து முட்டைகள் கோழி முட்டைகளை விட சத்தானவை.

​போலேட் நிறைந்தது

வாத்து முட்டைகளில் 80மைக்ரோ கிராம் போலேட் உள்ளது. கோழி முட்டைகளில் 100 கிராமில் 47 மைக்ரோ கிராம் காணப்படுகிறது. வாத்து முட்டைகளில் உள்ள உயர் போலேட் அல்லது விட்டமின் பி9 போன்றவை கர்ப்ப சிக்கல்கள், இதய நோய்கள் மற்றும் புற்றுநோயை குறைக்க உதவுகிறது.

​உயர் விட்டமின் பி12 இதில் உள்ளது

வாத்து முட்டையில் கோழி முட்டையை விட அதிகளவு மஞ்சள் கருவானது காணப்படுகிறது. முட்டையின் வெள்ளைக் கருவுடன் ஒப்பிடும்போது முட்டையின் மஞ்சள் கருவில் அதிக வைட்டமின் பி 12 இருப்பதாக ஒரு ஆய்வு காட்டுகிறது. வாத்து முட்டையின் மஞ்சள் கரு பெரியதாக இருப்பதால், கோழி முட்டைகளுடன் ஒப்பிடும்போது வாத்து முட்டைகளில் வைட்டமின் பி 12 அதிகமாக இருக்கும்.

​உயர் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்

மஞ்சள் கருக்கள் லினோலிக் அமிலம் போன்ற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களின் அடர்த்தியான மூலமாகும். வாத்து முட்டைகளில் கோழி முட்டைகளை விட பெரிய மஞ்சள் கரு உள்ளது, இதனால் இதில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகம். வாத்து முட்டைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதால் இது இதயத்திற்கு சிறந்தது. இது தினசரி கொழுப்பு அமில தேவைகளை பூர்த்தி செய்கிறது.

​பேக்கிங்கிற்கு நல்லது

கேக்குகள், பேஸ்ட்ரிகள் மற்றும் குக்கீகள் போன்ற பேக்கரி பொருட்களில் முட்டை அல்புமின் ஒரு முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. வாத்து முட்டைகள் அவற்றின் புரதங்களின் காரணமாக சிறந்த நுரைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. இதன் பிசுபிசுப்பு தன்மை காரணமாக பேக்கிற்கு நல்லது. வாத்து முட்டைகளின் புரதம் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுவதில்லை. எனவே இது பேக்கிங் நோக்கங்களுக்கு ஏற்றதாக உள்ளது.

​வாத்து முட்டையை பராமரிக்க அதிக பராமரிப்பு தேவை இல்லை

வாத்து முட்டைகள் வலுவான முட்டைக் கூடுகளைக் கொண்டு இருப்பதால் , அதிர்ச்சிகளை எதிர்க்கும் அதிக திறன், அதிக நிலைத்தன்மை, பெரிய அளவு மற்றும் பல்வேறு வகையான வண்ணங்களைக் கொண்டுள்ளன. வாத்து முட்டைகளின் வலுவான முட்டை ஓடு உடைவதை தடுக்கிறது. அறை வெப்பநிலையில் இந்த முட்டையின் நிலைப்புத்தன்மை அதிகம். எனவே வாத்து முட்டைகளை பராமரிக்க குறைந்த பராமரிப்பு இருந்தால் போதும். இதை கையாள மிகவும் எளிதானது.

​முட்டை அழற்சி இருப்பவர்களுக்கு இது சிறந்த மாற்று

சிலருக்கு கோழி முட்டைகளில் ஒவ்வாமை இருக்கும். எனவே கோழி முட்டைகளில் ஒவ்வாமை இருப்பவர்கள் வாத்து முட்டைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். வாத்து முட்டை மற்றும் கோழி முட்டைகளில் காணப்படும் முக்கிய உணவு ஒவ்வாமை புரதம் ஓவொமுகோயிட் ஆகும். எனவே வாத்து முட்டைகளை நீங்கள் சிறந்த மாற்றாக தேர்ந்தெடுக்கலாம்.

​ஆன்டி பாக்டீரியல் விளைவு

வாத்து முட்டையின் வெள்ளை கருவில் ஆன்டி பாக்டீரியல் தன்மை காணப்படுகிறது. எனவே கரு வளர்ச்சியை தடுக்கும் பாக்டீரியாக்களை தடுக்க உதவுகிறது. கோழி முட்டைகளுடன் ஒப்பிடும்போது வாத்து முட்டையின் வெள்ளைக்கரு சால்மோனெல்லாவுக்கு எதிராக அதிக ஆண்டிமைக்ரோபியல் செயல்பாடு இருப்பதாக ஒரு ஆய்வு காட்டுகிறது.

​வாத்து முட்டை சேமிப்பு

வாத்து முட்டைகளில் உள்ள ஓவல்புமின் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் புரதம் ஆகும். ஒரு ஆய்வின்படி, கோழி முட்டைகளுடன் ஒப்பிடும்போது 15 நாட்கள் வைத்திருக்கும் வாத்து முட்டைகளின் புரத வகைகளில் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. எனவே வாத்து முட்டைகளை நீண்ட நாட்கள் வைத்து இருந்தாலும் கெடாமல் இருக்கும்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags