டில்லி, வட கிழக்கு பகுதியில், குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தால் தடைபட்ட, 10ம் வகுப்பு தேர்வும் நடத்தப்படும் என, தெரிவித்தது.இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்களின் பெற்றோர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தேர்வு நடத்தினால், மாணவர்கள் பாதிக்கப்படக் கூடும்.குறிப்பாக, ஜுலையில், கொரோனா பாதிப்பு உச்சத்தை அடையும் என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரித்துள்ளது. எனவே, அந்த சமயத்தில் தேர்வு நடத்தினால் மாணவர்கள், கொரோனாவால் பாதிக்கும் ஆபத்து உள்ளது.

எனவே, பிளஸ்-2 தேர்வு நடத்துவது தொடர்பாக, சி.பி.எஸ்.இ., பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அத்துடன், தேர்வு நடத்தவும் தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே நடத்தி முடித்த தேர்வுகள், பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களிடம் நடத்திய உள் மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில், மதிப்பெண் அளித்து, தேர்ச்சியை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி, ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக விசாரணைக்கு வந்தது.அப்போது, சி.பி.எஸ்.இ., சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ரூபேஷ் குமார், ''பிளஸ்-2 தேர்வு நடத்துவது குறித்து உரிய முடிவு எடுத்து விரைவில் அறிவிக்கப்படும்,'' என்றார். இதையடுத்து, வரும், 23ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்த அமர்வு, அன்று, முடிவை தெரிவிக்க வேண்டும் என, உத்தரவிட்டது.

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.