10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு
கரோனா தொற்று உள்ளதா என்பதை சோதனை செய்யத் தேவையான தெர்மல் ஸ்கேனர் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவியருக்கு இரண்டு முகக்கவசங்கள் வழங்கப்படுவதோடு, தேர்வு அறைப் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஒரு தேர்வறையில் 10 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்படுவார்கள். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கும். மாணவர்கள் காலை 9.45 மணிக்கு பள்ளிக்கு வரவேண்டும். தேர்வு எழுதவுள்ள மாணவர்களில், யார், யாருக்கு கரோனா பாதிப்பு உள்ளது என கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் அதிகமுள்ள மாணவர்களுக்கு தேர்விலிருந்து விலக்கு அளிப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்.
தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி, ஆன்லைன் மூலம் கல்விக் கட்டணம் செலுத்திட வேண்டுமென பள்ளி நிர்வாகங்கள் வலியுறுத்துவது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தற்போது, ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது மட்டுமே சாத்தியமாக உள்ளது. கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்தைக் கூறி, தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளிலிருந்து மாணவ, மாணவியர்களை நீக்கினால் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.