1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

போன் நலன் முதல் உடல்நலன் வரை! -ஸ்மார்ட் போனை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்த சில குறிப்புகள்




நம்மில் பெரும்பாலானோர் விழித்திருக்கும் நேரமெல்லாம் ஸ்மார்ட்போனை உள்ளங்கையில் வைத்து தாங்குகிறோம். நமது அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத பந்தமாக மாறிவிட்ட ஸ்மார்ட்போனை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்த இதோ சில குறிப்புகள்.



செயல்திறன் மேம்பட:

# 01. நமது போனின் முகப்புத் திரையில் (Home Screen -ல்) ஆப்ஸ்களாக வைத்து குவிக்காமல், அதை வெறுமனே வைப்பது அல்லது மிக முக்கியமான ஆப்களை மட்டும் வைத்துக்கொள்வது சிறந்தது. இதன்மூலம், நம் மொபைல் செயல்திறனில் ஒரு பெரிய வித்தியாசம் கிடைக்கும்.

# 02. மூன்று நாட்களுக்கு ஒருமுறை அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது நமது மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்வது அவசியம்.

# 03. தூசிகள் மற்றும் அழுக்குகள் நமது போனை பாதிக்கக்கூடும் என்பதால், அடிக்கடி மென்மையான துணியால் சுத்தம் செய்யலாம்.

# 04. அழுக்குகள், கீறல்கள், தூசிகள் போன்றவற்றில் இருந்து நமது போனை பாதுகாத்துக்கொள்ள நல்ல தரமான, உறுதியான மொபைல் கவர்களைப் பயன்படுத்த வேண்டும்

 05. வாரத்திற்கு ஒருமுறை மொபைலை Restart செய்வது நல்லது. மொபைலை அதிகம் பயன்படுத்துவோர், வாரம் இருமுறை Restart செய்யலாம்.

# 06. மொபைல் நிறுவனம் அளிக்கும் Software Update-களையும், அடிக்கடி பயன்படுத்தும் ஆப்ஸ்களின் Update-களையும் உடனுக்குடன் செய்துவிடுவது புத்திசாலித்தனம்.

# 07. நேரம் கிடைக்கும்போது நமது போனின் User Manual -ஐ ஒருமுறையாவது படித்துப் பார்ப்பது நல்லது. மொபைலில் தேவையற்ற Widget களை நீக்கிவிடுவது சிறந்தது.

# 08. அதிக சூடு, குளிர்ச்சி மற்றும் காந்தவிசை உள்ள இடங்களில் நமது போனை வைத்திருப்பது நல்லதல்ல.

# 09. Automatic Screen Lock Time செட் செய்துகொள்வது சிறந்தது.

# 10. நமக்கு மிகவும் பயனுள்ள ஆப்ஸ்களின் Premium மற்றும் Beta Version-களை உபயோகிக்கலாம்


சேமிப்புத் திறன் மேம்பட:

# 01. போனில் நாம் அடிக்கடி பயன்படுத்தாத, தேவையில்லாத ஆப்ஸ்கள் இருந்தால் அதை Uninstall செய்து விடுவது நல்லது. Uninstall செய்யும் முன்பு செட்டிங்கில் ஆப் டேட்டாவை க்ளீயர் செய்துவிட வேண்டும்.

# 02. நாம் ஆப்களை நிறுவும்போது அல்லது அவை இயங்கும்போது, அவை குப்பைக் கோப்புகளை தற்காலிக சேமிப்பில் விட்டுவிடும். அவற்றை (Clear Cache) அவ்வப்போது அழித்துவிட வேண்டும்.

# 03. தரமான SD கார்டுகளைப் பயன்படுத்தி நமது சேமிப்பிடத்தை விரிவாக்கிக்கொள்ள வேண்டும்.

# 04. Light Version கிடைக்கும் ஆப்ஸ்களில், அவை நமக்கு போதுமானதாய் இருந்தால் அவற்றைப் பயன்படுத்தலாம்.

 05. போனின் மற்றும் ஆப்ஸ்களின் Cloud Storage களைப் போதுமான அளவு பயன்படுத்திக்கொள்ளலாம்.

# 06. நாம் பயன்படுத்த மாட்டோம் என்றால், நமது போனின் Animation -களை Developer Option-ல் சென்று ஆஃப் செய்துவிடலாம்.


பாதுகாப்பு மேம்பட:

# 01. நமது போனை பாஸ்வேர்ட் மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் லாக் செய்துகொள்வது பாதுகாப்பானது. இதனால் ஹேக்கர்களிடமும், திருடர்களிடமும் நமது விவரங்கள் செல்வது ஓரளவு தடுக்கப்பட வாய்ப்புண்டு.

# 02. பொது வெளியில் கிடைக்கும் இலவச WiFi-களைத் தவிர்த்து விடுவது சிறந்தது.

 03. பைக்கில் செல்லும்போது தலையை சாய்த்தவாறும் அல்லது ஹெல்மெட்டினுள் போனை வைத்தும் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

# 04. நாம் பயன்படுத்தும் ஹெட்போன்கள் தரமானவையாக இருக்க வேண்டும். மேலும், அவ்வப்போது அவற்றைத் துடைத்து சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும்.

# 05. நாம் ஒரு புதிய ஆப்பை பதிவிறக்கி நிறுவ விரும்பும்போது, நம்பகமான Apps Store-களில் இருந்து மட்டுமே ஆப்ஸ்களை Download செய்ய வேண்டும்.

# 06. நமது பல்வேறு பயன்பாடுகளின் Username மற்றும் Password ஆகியவற்றை அவ்வப்போது மாற்றுவது சிறந்தது.



பேட்டரி திறன் மேம்பட:

# 01. இரவு நேரங்களில் மொபைல்போனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கச் செல்வதை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும்.

# 02. போன் மெமரியைப் பொறுத்தவரை எப்போதும் கால் பங்கு (25%) காலியாக வைத்து இருப்பதே சிறந்தது.

# 03. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நமது மொபைலை ஃபேக்டரி ரீசெட் செய்ய வேண்டும். ஆனால் அப்படி செய்வதற்கு முன்னர் நமது அனைத்து விவரங்களையும் பேக்-அப் எடுத்து வைத்துக்கொள்வது அவசியம்.

 04. தேவையற்ற ஆப்களின் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்த நிலையில் வைக்கலாம்.

# 05. மொபைல் பேட்டரியை 100% சார்ஜ் செய்யாமலும்,10%-க்கு கீழ் இறங்கிவிடாமலும் பார்த்துக்கொள்வது சிறந்தது.15% முதல் 95% வரையிலான அளவில் பேட்டரியைப் பராமரிப்பது சிறந்தது.

# 07. இணையதளப் பயன்பாடு இல்லாதபோது மொபைல் டேட்டாவை ஆஃப் செய்து வைக்க வேண்டும்.

# 08. அதிக பேட்டரி சக்தியை உபயோகிக்கும் பயன் குறைந்த ஆப்களை நீக்கிவிடுவது சிறந்தது.


09. தேவைப்படும் போது Battery Saver வாய்ப்பைப் பயன்படுத்தலாம்.

# 10. தரமான ஒரிஜினல் சார்ஜர்களைப் பயன்படுத்துவது பேட்டரியின் திறனை அதிகரிக்கும்.



உடல்நலம் மேம்பட:

# 01. மொபைல் போனை சட்டைப் பையில் வைப்பதைவிட பேன்ட் பாக்கெட்டில் வைப்பது சிறந்தது.

#02. Vibration அதிக ரேடியேஷனை வெளிப்படுத்த வாய்ப்புண்டு என்பதால், முடிந்தவரை நமது மொபைலை Vibration Mode -ல் இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம்.

# 03. எப்போதும் நமது மொபைல்போனை இடதுபுறம் காதில் வைத்துப் பேசுவது நல்லது.

# 04. இரவு தூங்குவதற்கு 1 மணிநேரம் முன்பும், காலையில் எழுந்ததும் 1 மணி நேரம் வரையிலும் நாம் மொபைல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்துவிடலாம்.

# 05. வாரம் ஒருநாள் ஸ்மார்ட் போனை ‘தொடா’ விரதம் இருப்பது சிறந்தது.

# 06. தூங்கும்போது படுக்கை அருகில் மொபைல் போனை வைக்காமல் தூரமாக அல்லது வேறு அறையில் வைப்பது நல்லது.

# 07. சமையலறை மற்றும் பாத்ரூமிற்குள் மொபைல் போனை கொண்டு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

# 08. தேவையான அளவு Screen Brightness மற்றும் எழுத்துகளின் அளவு (Font Size) மட்டுமே வைத்துக்கொள்ளலாம்.

# 09. அதிக வெளிச்சம் மற்றும் இருட்டில் மொபைல் போன் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

# 10. ஒருநாளின் குறிப்பிட்ட சில நேரங்களை மொபைல் போன் பயன்படுத்தா நேரம் என நமக்கு நாமே வரையறுத்துக் கொள்ளலாம்.



Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags