நீட் தேர்வில் வெற்றிபெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர பிரத்யேக உள் ஒதுக்கீடு வழங்க தனி சட்டம் இயற்றப்படும் என்று முதல்வர் பழனிசாமி பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்திருந்தார். | |
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது தமிழக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவை 110ன் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க தனி சட்டம் கொண்டு வரப்படும். நீட் தேர்வை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது.நீட் நுழைவுத் தேர்வினால் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவர் ஆகும் கனவு குறைந்துவிட்டது. | |
நீட் தேர்வை எதிர்த்து தமிழக அரசு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களை பாதிப்பதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீட் அறிமுகமான பின்னர், மருத்துவக் கல்லூரியில் சேரும் நிலை குறைந்துவிட்டது. நீட் தேர்வு வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர பிரத்யேக உள் ஒதுக்கீடு வழங்க தனி சட்டம் இயற்றப்படும். அரசு, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்காக இந்த சட்டம் இயற்றப்படும் என அறிவித்தார். | |
இந்நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது |
Home »
NEET.
» நீட் : அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு - அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.