1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

"Super Food" என்று அழைக்கப்படும் "சப்ஜா விதையான் மருத்துவ குணங்கள்


🍚"Super Food" என்று அழைக்கப்படும் "சப்ஜா விதை"

🌿🌼🌸நலமான வாழ்வே..
🌿🌼🌸வளமான வாழ்வு..

திருநீற்றுப் பச்சிலை என்ற மூலிகையே சப்ஜா விதைகள். இதை நாம் அதிகமாக பலூடா மற்றும் ஐஸ்கிரீம்களில் பார்த்திருப்போம். ஒருசிலர் சப்ஜா விதையும் சியா விதையும் ஒன்று தான் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் சப்ஜா விதை கருப்பு நிறத்தில் எள் போன்று இருக்கும். ஆனால் சியா விதையோ கருப்பு, சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்திலிருக்கும்.
༺🌷༻
இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் சப்ஜா விதையை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதை சூப்பர் ஃபுட் என்றே அழைக்கிறார்கள். ஏனென்றால், நாம் சிறிதளவு சப்ஜா விதையை சாப்பிடும் பொழுது நமக்கு உடனடியாக பசி அடைந்துவிடுகிறது. இதைத் தவிர்த்து மேலும் நமக்கு பசி எடுக்காதவாரு பார்த்து கொள்வதினால் நாம் எந்த நொறுக்குத் தீனியும் தின்ன வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. இதனால் நமது உடல் எடை குறைகிறது.
༺🌷༻
சப்ஜா விதையில் ஒமேகா-3 அமிலம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இதில் நார்சத்து அதிகமாக இருப்பதினால் உங்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுவிக்கிறது. அது மட்டுமல்லாமல் செரிமான பிரச்சனை, நெஞ்செரிச்சல், குடலில் புண் போன்ற அனைத்திற்கும் தீர்வாக சப்ஜா விதைகள் இருக்கிறது.
༺🌷༻
இதில் வைட்டமின் ஏ, பி காம்ப்ளக்ஸ், துத்தநாகம் சத்துக்கள் இருப்பதினால் பித்தத்தைப் போக்கி உடல் உஷ்ணத்தை குறைக்கிறது. #மகரயாழ் அதேபோல் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் இருக்கும் சர்க்கரை அளவையும் குறைக்க உதவுகிறது.
༺🌷༻
இதில் குறைவாக கலோரிகள் உள்ளதால் உங்கள் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை அகற்றுகிறது. ஒரு நாளுக்கு தேவையான அனைத்து ஆற்றலும் இந்த சப்ஜா விதை சாப்பிடுவதனால் நமக்கு கிடைக்கிறது. இதை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிடுவது நல்லது. இல்லை எனில் குறைந்தது 6 மணி நேரம் வரை இந்த விதை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். இது நீரை உறிஞ்சும் தன்மை கொண்டதால் இதை நீரில் ஊற வைத்து எலுமிச்சை சாறு அல்லது பால் இல்லையெனில் ஐஸ்கிரீம் உடன் சேர்த்து சாப்பிடலாம்.
༺🌷༻
கர்ப்பிணிப் பெண்கள் இதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஆரம்பகால கர்ப்பிணி பெண்கள் சப்ஜா விதையை சாப்பிடுவதன் மூலம் கரு கலைய வாய்ப்பு உள்ளது. இது அதிகமாக குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். சப்ஜா விதை குளிர்ச்சி தன்மை அதிகமாக இருப்பதினால் சைனஸ், ஜலதோஷம் பிரச்சனை உள்ளவர்கள் இதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.
༺🌷༻
சப்ஜா விதையை போல் பல விதமான ஆரோக்கிய உணவுகளை நாம் இன்றுவரை அறியாமலேயே இருக்கிறோம். இனிமேல் இது போன்ற உணவுகளை அறிந்து நம் உடலுக்கு சக்தி தரும் உணவை உட்கொள்வது நல்லது.


Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags