கடந்த ஏப்ரல் மாதம், தேசிய இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் பரிந்துரையை அடுத்து வீடியோ கான்பரன்சிங் செயலியான ஜூம் செயலி பயன்படுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. தைவான், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஜூம் செயலியை பயன்படுத்த வேண்டாமென கேட்டுகொண்டன. உள்துறை அமைச்சகத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து, பயனர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக ஜூம் செயலி கூறியிருந்தது.
அவ்வப்போது பாதுகாப்பை சமரசம் செய்யும் மொபைல் செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் வந்துள்ளது. குறிப்பாக பிரபல வீடியோ பகிரும் தளமான டிக்டோக் செயலி, சீனாவின் இணைய நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். டிக்டோக் செயலி தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனால் பல ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகள், சீன டெவலப்பர்களால் உருவாக்கப்பட்டவை அல்லது சீன இணைப்புகளைக் கொண்ட நிறுவனங்களால் தொடங்கப்பட்டவை. அதில் உளவு பார்ப்பதற்கான ஸ்பைவேர் அல்லது பிற தீங்கிழைக்கும் பொருட்கள் பயன்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தகவல்கள் பாதுகாப்பில் தீங்கு ஏற்படுத்தக்கூடுமென்பதால் தான், பாதுகாப்பு படை வீரர்கள் பயன்படுத்த வேண்டாமென ராணுவம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. சீனா தொடர்புடைய வன்பொருள் அல்லது மென்பொருட்களில் பாதுகாப்பு குறைபாடு கவலைகள் இருப்பதை மேற்கத்திய நாடுகளின் உளவு அமைப்புகள் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றன. ஒரு வாதத்திற்கு, ஏதேனும் மோதல் ஏற்பட்டால், தகவல் தொடர்பு சேவையை சீர்குலைக்க சீனா இதனை பயன்படுத்த கூடுமென கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.