1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

நீட் தேர்வில் மாநில அரசு பாடப்புத்தகத்தில் இருந்து 97 % வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது: பள்ளிக் கல்வித்துறை

 

நீட் தேர்வில் மாநில அரசு பாடப்புத்தகத்தில் இருந்து 97 சதவிகித வினாக்கள் கேட்கப்பட்டதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

MBBS, BDS உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த 13-ம் தேதி நடைபெற்றது.720 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வை நாடு முழுவதும் 14.37 லட்சம் பேர் எழுதினர்.

நீட் தேர்வில் இடம்பெற்ற உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடங்களில் 97 சதவிகித வினாக்கள் மாநில அரசின் புதிய பாடப்புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உயிரியல் பாடத்தில் இடம்பெற்றிருந்த 90 வினாக்களில் 87 வினாக்கள் 11 மற்றும் 12-ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டிருந்ததாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேதியியல் பாடத்தில் இடம்பெற்றிருந்த 45 வினாக்களில் 43 வினாக்களும், இயற்பியல் பாடத்தில் இடம்பெற்றிருந்த 45 வினாக்களில் 44 வினாக்களும் 11 மற்றும் 12-ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், கடந்த 2018-2019-ம் ஆண்டு 11-ம் வகுப்புக்கான பாடப்புத்தகமும், 2019-2020-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்புக்கான பாடப்புத்தகமும் புதியதாக வெளியிடப்பட்டது.

CBSE பாடத்திட்டத்துக்கு இணையாக வடிவமைக்கப்பட்டிருந்த புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வை எழுதிய பள்ளி மாணவர்கள் இந்த முறை அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் இறுதியில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags