1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

விதிமீறல் புகார் காரணமாக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட Paytm செயலி மீண்டும் தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பெற்றுள்ளது

 விதிமீறல் புகார் காரணமாக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட Paytm செயலி மீண்டும் தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பெற்றுள்ளது. 

 

உலகில் பிரபல பணப்பரிமாற்ற செயலிகளில் ஒன்றாக Paytm செயலி இருந்து  வருகிறது. இந்தியாவின் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும்  இந்த Paytm செயலிக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும்  கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதனிடையே விதிமுறை  மீறல் காரணமாக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து Paytm செயலி  நீக்கப்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்திருந்தது. இதனால் உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 

இந்த தடை தொடர்பாக தெரிவித்திருந்த Paytm நிறுவனம், தடை செய்யப்பட்ட செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் இது தொடர்பாக கூகுள் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். வாடிக்கையாளர்களின் கணக்குகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்திருந்தது. 

 

இந்நிலையில் கூகுள் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் தற்காலிகமாக கூகுள் பிளே ஸ்டோரில் நீக்கப்பட்ட Paytm செயலி மீண்டும் பிளே ஸ்டோரில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள Paytm நிறுவனம், நாங்கள் திரும்பவும் வந்துவிட்டோம் என பதிவிட்டுள்ளது.. 

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags