ஏ.டி.எம்., கட்டணம்: ஆகஸ்ட் முதல் உயர்வு
ஏ.டி.எம்., இயந்திரங்களில் இருந்து பணம் எடுப்பதற்கான பரிவர்த்தனை கட்டணம் ஆக., 1ம் தேதி முதல் உயருகிறது.
ஏ.டி.எம்., எனப்படும் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு வாயிலாக பணம் எடுத்துக் கொள்ளலாம். ஏ.டி.எம்., இயந்திரங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் 2014ல் திருத்தி அமைக்கப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்கு பின் தற்போது ரிசர்வ் வங்கி மீண்டும் திருத்தி அமைத்துள்ளது.
இதன்படி வங்கிக் கணக்கு இருக்கும் வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரத்தில் மாதத்துக்கு ஐந்து முறை கட்டணமின்றி பரிவர்த்தனை செய்யலாம். ஐந்து முறைக்கு மேல் செய்யப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும், கட்டணம் 15 ரூபாயிலிருந்து 17 ரூபாயாக உயர்த்தப் பட்டு உள்ளது.
பணப் பரிவர்த்தனை அல்லாத பிற சேவைக்கு ஏ.டி.எம்., இயந்திரத்தை பயன்படுத்த கட்டணம், 5 ரூபாயிலிருந்து 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஆக., 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதர வங்கிகளின் ஏ.டி.எம்., இயந்திரத்தில் மாதத்துக்கு மூன்று முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம்.
அதற்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைக்கு வசூலிக்கப்படும் கட்டணம் 20 ரூபாயில் இருந்து 21 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அடுத்தாண்டு ஜன., 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.