2021-22 கல்வி ஆண்டில் சி.பி.எஸ்.இ. பாடம் 30% குறைப்பு
மத்திய கல்வி வாரியம், கொரோனா பரவல் எதிரொலியால், பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், 2021-22-ம் கல்வி ஆண்டில் சி.பி.எஸ்.இ. பாடங்களை குறைக்க முடிவு செய்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பள்ளிகளில் வகுப்புகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டன.
மாணவர்கள் நலன் கருதி கடந்தாண்டு முழு பாடத்திட்டமும் நடத்தப்படவில்லை. அதற்கு பதில் 30 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டன. இந்த நிலையில், 2021-22-ம் கல்வி ஆண்டிலும் வகுப்புகளை நடத்த முடியாத நிலை நீடிக்கிறது. எனவே, 2021-22-ம் கல்வி ஆண்டிலும் பாடங்களை குறைக்க சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டை போல 30 சதவீதம் அளவுக்கு பாடங்கள் குறைக்கப்பட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சி.பி.எஸ்.இ. வெளியிட்டது. பாடங்களை 30 சதவீதமாக குறைப்பது மட்டுமின்றி 2 கட்டமாக தேர்வு நடத்தவும், சி.பி.எஸ்.இ. திட்டமிட்டுள்ளது. கடந்தாண்டை போல 10, 12-ம் வகுப்புகளுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டு விடக்கூடாது என்பதற்காக சி.பி.எஸ்.இ. இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, முதல் கட்ட தேர்வு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும். 2ம் கட்ட தேர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும். அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்யுமாறு சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாடங்கள் 30 சதவீதம் குறைப்பு மற்றும் 2 கட்ட தேர்வுகள் தொடர்பாக சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
கேள்விகளுக்கு பல்வேறு பதில்களில் இருந்து விடைகளை தேர்வு செய்வது என்ற முறையில் முதல் கட்ட தேர்வு நடத்தப்படும். அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்கும் வகையில் 2ம் கட்ட தேர்வு நடைபெறும் என்று தெரியவந்துள்ளது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.